Homeசெய்திகள்அரசியல்சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்

-

- Advertisement -

மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது. சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து மக்களவையில் இன்று விவாதம் தொடங்கியது. இந்த தீர்மானம் குறித்து விவாதம் நடைபெறுவதால், அவையை மூத்த எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையேற்று நடத்தி வருகிறார்.

we-r-hiring

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணி சார்பில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவேத் இந்த தீர்மானத்தை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தார். மொத்தம் 118 எம்.பி.க்கள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவையில் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்றும், எதிர்க்கட்சியினருக்கு தங்கள் கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை முன்வைக்க போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால், “மக்களவையில் துணை சபாநாயகர் பதவி கடந்த பல ஆண்டுகளாக காலியாக உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி முக்கியமான இந்த பதவியை மத்திய அரசு நிரப்பாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசியலமைப்பு ரீதியான ஒரு முக்கிய பதவியில் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது,” என கடுமையாக விமர்சித்தார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கிய நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இருப்பினும், மக்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) தனிப்பெரும்பான்மை இருப்பதால், சபாநாயகருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்படும் என்பது அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்…இரண்டாவது அமர்வு இன்று தொடக்கம்…

MUST READ