Homeசெய்திகள்அரசியல்இது சினிமா கிடையாது! ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக வேண்டும் என்றால் சொன்ன வாக்குறுதிகளை...

இது சினிமா கிடையாது! ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக வேண்டும் என்றால் சொன்ன வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் சாடல்!

-

- Advertisement -

“இது சீன் பண்ணுவதற்கோ, போட்டோ ஷூட் எடுப்பதற்கோ, ரீல்ஸ் போடவோ சினிமா கிடையாது; பல கோடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்

we-r-hiring

கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசின் செயல்பாடு மற்றும் தற்போதைய விலைவாசி உயர்வு குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

“சீன் போட இது சினிமா கிடையாது!”

தமிழக அரசின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகள் குறித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த்:

  • மக்களின் தீர்ப்பு: தமிழக அரசின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதற்கு மக்கள்தான் சரியான பதில் சொல்ல வேண்டும்.

  • செயல்படாத நிர்வாகம்: நாங்கள் தொகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்கிறோம்; அதிகாரிகளிடம் பேசுகிறோம். ஆனால், இதுவரை ஒரு டெண்டரும் விடப்படவில்லை, எந்தவொரு அடிப்படை வேலைகளும் ஆரம்பிக்கப்படவில்லை.

  • வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: ரீல் ஹீரோவாக இருப்பவர் ரியல் ஹீரோ ஆக வேண்டும் என்றால், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

அரிசி விலை உயர்வு & அரசின் மெத்தனப் போக்கு

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து வேதனை தெரிவித்த அவர்:

  • அரிசி விலை உயர்வு: நாட்டில் அத்தியாவசியப் பொருளான அரிசியின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு டன் அரிசி ரூ.15,000 வரை உயர்ந்துள்ளது.

  • வாழ்வாதாரப் பிரச்சினை: விலைவாசி உயர்வு குறித்து அரசுதான் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அதை விடுத்து, சும்மா சினிமா பார்த்துக்கொண்டு, திரையரங்கில் உட்கார்ந்து அழுதுவிட்டு சீன் போடுவதில் எந்தப் பயனும் இல்லை. இவை அனைத்துமே மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகள் என்பதைத் தவெக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

‘மக்கள் தான் தலைவர்களை வழிநடத்துகிறார்கள்’ — 2026 தேர்தல் சூழல் குறித்து தோழர் தியாகு சிறப்புப் நேர்காணல்

 

MUST READ