Homeசெய்திகள்இந்தியாநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்…இரண்டாவது அமர்வு இன்று தொடக்கம்…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்…இரண்டாவது அமர்வு இன்று தொடக்கம்…

-

- Advertisement -

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் கூட்டத் தொடரை சூழ்ந்து கொண்டுள்ளதால் காரசார கேள்விகள், விவாதங்கள், கூச்சல் குழப்பம், வெளிநடப்பு ஆகியவற்றிற்கு பஞ்சமிருக்காது.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்…இரண்டாவது அமர்வு இன்று தொடக்கம்…நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்டம் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 2 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்ட அமர்வின் முதல் நாளான இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடிய நிலையில், இக்கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப ஏற்கெனவே திட்டமிட்டுள்ளன. முக்கியமாக போரின் காரணத்தால், இந்தியா கச்சா எண்ணெயை பிற நாடுகளில் இருந்து கொள்முதல் செய்வதற்கு 30 நாட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்அனுமதி வழங்கிய விவகாரம் , மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் ,  வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர் ஆகியவற்றின் விலையேற்றம், இந்திய விருந்தினராக வந்து சென்ற ஈரானிய கப்பல் இந்திய கடல் எல்லைக்கு அருகே அமெரிக்க நீர் மூழ்கி கப்பலால் தாக்கப்பட்ட விவகாரம் உள்ளிட்டவை கூட்டத் தொடரில் எதிரொலிக்க உள்ளன.

இது தொடர்பான கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள்  எழுப்ப திட்டமிட்டுள்ளன. இவை தவிர நடப்பு கூட்டத்தினரில் முக்கிய விவகாரமாக உருவெடுத்துள்ளது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நடுநிலையாக மக்களவையில் செயல்படவில்லை என தெரிவித்து 118-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் சேர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரவுள்ளனர். ஏற்கனவே குடியரசு தலைவர் உரை மீதான விவாதத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் உரையாற்றாத சூழலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் விரிவான உரையை முன் வைக்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

UPI தளம், வங்கிகள் மூலம் கடன் வழங்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுமா? எம்.பியின் கேள்விக்கு நிதியமைச்சர் பதிலடி

we-r-hiring

MUST READ