Homeசெய்திகள்இந்தியா"இளைஞர்களுக்கு உத்தரவிடாதீர்கள், உரையாடுங்கள்!" - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் முக்கிய அறிவுரை!

“இளைஞர்களுக்கு உத்தரவிடாதீர்கள், உரையாடுங்கள்!” – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் முக்கிய அறிவுரை!

-

- Advertisement -

இன்றைய தலைமுறையினரிடம் அதிகாரம் செலுத்துவதை விட்டுவிட்டு, அன்போடும் உரையாடல் மூலமாகவும் அணுக வேண்டும் என்றும், இளைஞர்களுக்கு உத்தரவிடுவதை விட விவாதங்களும் கலந்துரையாடல்களுமே அவசியம் என்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்."இளைஞர்களுக்கு உத்தரவிடாதீர்கள், உரையாடுங்கள்!" - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் முக்கிய அறிவுரை!

புதுடெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ‘விஷ்வ மாங்கல்ய சபா’ சார்பில் நடைபெற்ற தேசிய விழிப்புணர்வு கூட்டத்தின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை வலியுறுத்தினார்.

we-r-hiring

“கீழ்படிதல் காலம் மாறிவிட்டது; கேள்விகள் கேட்கும் காலம் இது!”
நிகழ்ச்சியில் இன்றைய இளைய தலைமுறையின் சிந்தனை மாற்றம் குறித்துப் பேசிய மோகன் பகவத் தெரிவித்ததாவது, “நாங்கள் இளைஞர்களாக இருந்த காலத்தில் மூத்தோரின் சொற்களுக்குக் கண்மூடித்தனமாக கீழ்படிவது வழக்கமாக இருந்தது. ஆனால், இன்றைய சூழல் முற்றிலும் மாறுபட்டது. இன்றைய இளைய தலைமுறையினர் எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் கேள்விகளை எழுப்புகிறார்கள்.

அவர்களுக்கு எதையும் கட்டளையாகக் கூறாமல், அதன் பின்னணியில் உள்ள காரணங்களையும் நியாயங்களையும் நாம் விளக்க வேண்டும். இளைஞர்களுக்குக் கட்டுப்பாடுகளை விடவும், திறந்த மனதுடனான உரையாடல்களே (Discussion, not dictation) தேவைப்படுகின்றன.”"இளைஞர்களுக்கு உத்தரவிடாதீர்கள், உரையாடுங்கள்!" - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் முக்கிய அறிவுரை!

குடும்பங்களில் தொடர வேண்டிய உரையாடல்கள்
தற்காலத்தில் குடும்பங்களுக்குள் இயல்பான பேச்சுவார்த்தைகள் குறைந்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், பெற்றோர்களும் மூத்தவர்களும் இளைஞர்களுடன் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும்; அவர்களிடம் அன்பாகப் பேசி வழிகாட்ட வேண்டும். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பெற்றோர்கள் சகிப்புத்தன்மையுடன் விளக்கமளிக்க வேண்டும். வெறும் அறிவுரைகளை விட, மூத்தோரின் அன்றாட நன்னடத்தைகள் மூலமே இளைஞர்கள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள் என தெரிவித்துள்ளாா்.

பண்பாடும் குடும்ப அமைப்பும்
இந்தியப் பண்பாடு மற்றும் குடும்பக் கட்டமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், தாய்மையே மனித நாகரிகத்தின் அடித்தளமாக விளங்குவதாகவும், குடும்ப அமைப்புகளைப் பலப்படுத்துவதன் மூலமே சமூகத்தில் நல்லொழுக்கத்தையும் ஒற்றுமையையும் நிலைநிறுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார். தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டு, அவர்களை அரவணைத்துச் செல்வதே சமூகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனத் தனது உரையில் மோகன் பகவத் தெளிவுபடுத்தினார்.

“எல்லாவற்றையும் முடக்கிய அரசால் வினாத்தாள் கசிவை மட்டும் முடக்க முடியவில்லை!” – மத்திய அரசை கடுமையாகச் சாடிய ராகுல் காந்தி!

MUST READ