டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய கொடூரமானத் தாக்குதல் தொடர்பான வழக்கை, அவசர வழக்காக ஏற்று வரும் திங்கள்கிழமை (ஜூலை 27) விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக, வழக்கறிஞர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாய்மொழி முறையீட்டை ஏற்றுக் கொள்ள உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது. “முறையான மனுவாக தாக்கல் செய்யப்பட்டால் மட்டுமே அதனை பரிசீலிக்க முடியும்” என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

ஜூலை 27 (திங்கள்கிழமை) விசாரணைக்கு வருகிறது: முறையான மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை!
நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து, மாணவர்கள் அமைப்புகள் மற்றும் வழக்கறிஞர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் உரிய நடைமுறைகளுடன் கூடிய முறையான மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஆய்வு செய்த உச்சநீதிமன்றம், சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இதனை அவசர வழக்காக வரும் ஜூலை 27 (திங்கள்கிழமை) அன்று விசாரிப்பதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய பரபரப்பு
ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடிச்சடி மற்றும் காவல் துறையின் அத்துமீறல்கள் குறித்துச் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே இந்த மனுவின் பிரதான கோரிக்கையாகும். வரும் திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
அரசின் தோல்விகளுக்கே விலை கொடுக்கும் இந்திய மக்கள்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!
