நாட்டின் தலைநகரான டெல்லியில் மணிப்பூரைச் சேர்ந்த பிரபல இசைக் கலைஞர் சோங்தம் விக்ரம் சிங் (Chongtham Vikram Singh) என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் ஏற்பட்ட அதிகப்படியான சத்தத்தைத் தட்டிக் கேட்டதற்காக அவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த இந்தச் சம்பவம், தேசிய அளவில் பெரும் கொந்தளிப்பையும் அரசியல் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.


நடந்தது என்ன?
டெல்லியின் கிலொகரி கிராமம் (Kilokari Village) பகுதியில் வசித்து வந்த 54 வயதான சோங்தம் விக்ரம் சிங், அப்பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட அமளியையும் பெருமளவு சத்தத்தையும் அமைதியான முறையில் கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த கும்பல் அவரைத் துரத்திச் சென்று சரமாரியாகத் தாக்கியுள்ளது. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தலைமறைவாக இருந்த சிறுவன் உட்பட 8 பே அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசியல் தலைவர்கள் மற்றும் மாணவர் அமைப்புகளின் கண்டனம்
ராகுல் காந்தி கேள்வி: “தலைநகரில் உள்ள வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்களா?” என்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சகமும் டெல்லி காவல் துறையும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க என்ன செய்கிறது எனப் கடுமையாக விமர்சித்தார்.
வடகிழக்கு அமைப்புகளின் போராட்டம்: இப்படுகொலையைக் கண்டித்து மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த சமூக அமைப்பினர் மற்றும் மாணவர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த வழக்கில் துரிதமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைநகரில் தட்டிக் கேட்ட ஒரு கலைஞர் கொல்லப்பட்டிருக்கும் இந்தச் சம்பவம், டெல்லியில் வாழும் வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்பு குறித்த நீண்டகாலக் கேள்விகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்குப் கொண்டுவந்துள்ளது.
தெலுங்கானா சட்டமன்றத்தில் சோகம்: அதிகாரிக்கு அமைச்சர் முதலுதவி அளித்தும் பலனின்றி மாரடைப்பால் மரணம்!
