Homeசெய்திகள்இந்தியா6ஜி தொழில்நுட்பத் துறையில் புதிய மைல்கல்: அமெரிக்கா தலைமையிலான சர்வதேசக் கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா!

6ஜி தொழில்நுட்பத் துறையில் புதிய மைல்கல்: அமெரிக்கா தலைமையிலான சர்வதேசக் கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா!

-

- Advertisement -

அடுத்த தலைமுறை தொலைத்தொடர்புத் தொழில்நுட்பமான 6ஜி (6G) நெட்வொர்க்கை சர்வதேச அளவில் மேம்படுத்தவும், பாதுகாப்பான வழியில் அமல்படுத்தவும் அமெரிக்கா உருவாக்கியுள்ள உலகளாவிய கூட்டமைப்பில் இந்தியா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.6ஜி தொழில்நுட்பத் துறையில் புதிய மைல்கல்: அமெரிக்கா தலைமையிலான சர்வதேசக் கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா!

அமெரிக்கா மற்றும் 24 உலக நாடுகளுடன் இணைந்து 6ஜி நெட்வொர்க் மேம்பாட்டுப் பணிகள் தீவிரமடையும்
அமெரிக்கா மற்றும் உலகின் முன்னணி 24 நாடுகளுடன் இணைந்து இந்தியா இக்கூட்டமைப்பில் பணியாற்றவுள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் 6ஜி தொழில்நுட்பத்தின் தரநிலைகளை நிர்ணயிப்பதிலும், இணையப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் இந்தியாவின் பங்கு வலுப்பெற்றுள்ளது.6ஜி தொழில்நுட்பத் துறையில் புதிய மைல்கல்: அமெரிக்கா தலைமையிலான சர்வதேசக் கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா!

we-r-hiring

‘பாரத் 6ஜி’ திட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரம்
மத்திய அரசு உள்நாட்டிலேயே 6ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கி மேம்படுத்தும் நோக்கில் ‘பாரத் 6ஜி’ (Bharat 6G) என்ற தொலைநோக்குத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. தற்போது அமெரிக்கா தலைமையிலான இந்த உலகளாவிய கூட்டணியில் இந்தியா இணைந்துள்ளதன் மூலம், ”அதிநவீன 6ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் சர்வதேச நாடுகளின் முழுமையான ஒத்துழைப்பு இந்தியாவிற்கு விரைவாகக் கிடைக்கும்.

இதன் மூலம், இந்திய ஒன்றிய அரசின் ‘பாரத் 6ஜி’ திட்டத்தைச் சர்வதேச அளவில் கொண்டு செல்லவும், உலகளாவிய சந்தையில் இந்தியத் தொழில்நுட்பங்களை உறுதியாக நிலைநிறுத்தவும் இது ஒரு பெரும் வாய்ப்பாக அமையும். மேலும், பொதுவான பாதுகாப்பு நலன்கள், வணிகப் போட்டித்தன்மை மற்றும் இணையப் பாதுகாப்பு (Cybersecurity) ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு வலுவான 6ஜி உள்கட்டமைப்பை உருவாக்க இக்கூட்டமைப்பில் உறுதியேற்கப்பட்டுள்ளது.”

6ஜி தொழில்நுட்பத் துறையில் புதிய மைல்கல்: அமெரிக்கா தலைமையிலான சர்வதேசக் கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா!

ஜி20 மாநாட்டின் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தம்
அமெரிக்காவில் நடைபெற்ற ஜி20 புதுமைப் படைப்புகள் தொடா்பான அமைச்சர்கள் கூட்டத்தின் (G20 Innovation Ministerial) இடையே, இந்திய மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை இணையமைச்சர் ஜித்தன் பிரசாதா மற்றும் அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லூட்னிக் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போதே இந்த முக்கிய முடிவு எட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, “அடுத்த தலைமுறை 6ஜி நெட்வொர்க் உருவாக்கத்தில் நமது பொதுவான பாதுகாப்பு, வணிகப் போட்டித்தன்மை மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் 24 நாடுகளுடன் இந்தியா இணைந்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்” என அமெரிக்க வர்த்தகத் துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப உலகில் இந்தியாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்திற்குச் சான்றாகவும், நாட்டின் எதிர்கால டிஜிட்டல் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அடித்தளமாகவும் இந்த சர்வதேசக் கூட்டணி பார்க்கப்படுகிறது.

அதிர்ச்சி சம்பவம்: இளம்பெண்ணின் வயிற்றில் இருந்து 13 பேனாக்கள், 5 ஸ்பூன்கள் அகற்றம்!

MUST READ