Homeசெய்திகள்இந்தியாமத்தியப்பிரதேசத்தில் கொடூரம்: சாகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பரிதாப பலி! - உயிரிழப்பு...

மத்தியப்பிரதேசத்தில் கொடூரம்: சாகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பரிதாப பலி! – உயிரிழப்பு மேலும் உயரும் என அச்சம்!

-

- Advertisement -

மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் அடுத்தடுத்து கொடூரமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.மத்தியப்பிரதேசத்தில் கொடூரம்: சாகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பரிதாப பலி! - உயிரிழப்பு மேலும் உயரும் என அச்சம்!

வெவ்வேறு கிராமங்களில் தொடர் மரணங்கள்!
மத்தியப்பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தைக் வாங்கிப் குடித்துள்ளதாகத் தெரிகிறது. சாராயம் குடித்த சிறிது நேரத்திலேயே அவர்களுக்குக் கடுமையான மயக்கம், வாந்தி மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளன.

we-r-hiring

பாதிக்கப்பட்டவர்களை உறவினர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழப்பு அதிகரிக்கும் எனப் பீதி!
கள்ளச்சாராயம் குடித்துப் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அப்பகுதி மக்கள் மற்றும் மருத்துவத்துறை வட்டாரங்கள் இடையே பெரும் அஞ்சப்படுகிறது.

போலீசார் தீவிர விசாரணை!
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாகர் மாவட்ட காவல் துறையினர் மற்றும் மூத்த அதிகாரிகள், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த நச்சுச் சாராயம் எங்கிருந்து காய்ச்சி கொண்டு வரப்பட்டது, இதன் பின்னணியில் இருக்கும் முக்கியக் குற்றவாளிகள் மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகள் யார் என்பது குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சாகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் சட்டவிரோதச் சாராய விற்பனைக்கு எதிராகப் போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இலங்கை அரசியலில் மாபெரும் திருப்பம்: $2.3 பில்லியன் ஏர்பஸ் ஊழல் வழக்கு.. மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச அதிரடி கைது!

MUST READ