பீகாரில் கனமழை மற்றும் அண்டை பகுதிகளில் இருந்து வரும் நீர்வரத்து காரணமாக கங்கை உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ள அபாயம் தீவிரமடைந்துள்ளது.


Highest Flood Mark-ஐ கடந்த கங்கை
பாட்னாவின் காந்தி காட் பகுதியில் கங்கை ஆற்றின் நீர்மட்டம் இன்று காலை Highest Flood Mark-ஐ கடந்தது. வெறும் 4 மணி நேரத்தில் நீர்மட்டம் சுமார் 10 செ.மீ. உயர்ந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பாட்னாவில் உள்ள தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகும் அபாயம் அதிகரித்துள்ளது. கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பல ஆறுகள் ஆபத்தான நிலையில்
கங்கை மட்டுமின்றி கந்தக், கோசி, புர்ஹி கந்தக், புன்புன் மற்றும் காக்ரா உள்ளிட்ட பல ஆறுகளும் பல்வேறு இடங்களில் அபாய அளவைத் தாண்டி ஓடுகின்றன.
பாட்னா, பகல்பூர், முங்கர், வைஷாலி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ள பாதிப்பில் முக்கியமாக உள்ளன.
5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
பீகாரில் ஏற்கனவே 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாட்னா மாவட்டத்தில் மட்டும் பல தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 2.32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
33 மீட்புக் குழுக்கள் தயார்!
நிலைமை மோசமடையும் பட்சத்தில் உடனடி மீட்புப் பணிகளை மேற்கொள்ள 6 NDRF மற்றும் 27 SDRF குழுக்கள் என மொத்தம் 33 மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல சுமார் 693 அரசு படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
நிர்வாகம் தீவிர கண்காணிப்பு
பாட்னா உள்ளிட்ட வெள்ள அபாயம் அதிகம் உள்ள மாவட்டங்களில் தாழ்வான பகுதிகள் மற்றும் கரைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நிவாரண முகாம்கள் மற்றும் சமூக சமையலறைகள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கனமழை மற்றும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதால், கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்.
RBI-யின் ₹7 லட்சம் கோடி திட்டம்! வங்கிகளில் குவிந்திருக்கும் பணத்தை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை
