இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே வாரியத் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.


வேகம் அதிகரிக்க நடவடிக்கை மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஜூலை 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த ஹைட்ரஜன் ரயில், தற்போது ஹரியானாவின் ஜிந்த் – சோனிபட் இடையே 89 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
தற்போது மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயிலை, 120 கி.மீ. வேகம் வரை இயக்குவதற்கான சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, விரைவில் இந்த ரயிலை மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
கூடுதல் திட்டங்கள்:
எரிபொருள் மற்றும் வழித்தடங்கள்: ஹைட்ரஜன் ரயிலை மேலும் பல வழித்தடங்களில் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் சீரான ஹைட்ரஜன் எரிபொருள் விநியோகம் குறித்தும் ஆய்வுகள் நடைபெறுகின்றன.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்: படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயில் தற்போது ஹவுரா – காமாக்யா இடையே இயங்கி வருகிறது. மேலும் 4 ரயில்கள் தயாராக உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக 11 ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2029-க்குள் போதைப்பொருள்கள் இல்லாத இந்தியா உருவாகும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!
