HomeBreaking Newsமத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடி ராஜினாமா! டெல்லியில் மாணவர்கள் மற்றும் CJP கட்சியினர்...

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடி ராஜினாமா! டெல்லியில் மாணவர்கள் மற்றும் CJP கட்சியினர் பிரம்மாண்டக் கொண்டாட்டம்!

-

- Advertisement -

நீட் (NEET) உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளில் எழுந்த பல்வேறு குளறுபடிகள் மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடி ராஜினாமா

we-r-hiring

கடந்த சில வாரங்களாகவே தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக, ‘CJP’ (Cockroach Janta Party) அமைப்பின் நிறுவனர் அபிஜித் திப்கே தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்கள் வலுப்பெற்றன.

மாணவர்களின் கோரிக்கைகளுக்கும், நாடு தழுவிய எதிர்ப்புகளுக்கும் இணங்கி தற்போது மத்திய கல்வி அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

டெல்லியில் கொண்டாட்டம் & அபிஜித் திப்கே பேட்டி:

ராஜினாமா செய்தி வெளியானதைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்டிருந்த CJP கட்சியினரும் மாணவர்களும் இனிப்புகளை வழங்கி, பட்டாசுகளை வெடித்துப் பிரம்மாண்டமாகக் கொண்டாடினர்.

இது குறித்து CJP தலைவர் அபிஜித் திப்கே செய்தியாளர்களிடம் கூறுகையில், “அச்சமின்றிப் போராடினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இந்தச் சம்பவமே சான்று. மாணவர்களின் நியாயமான உரிமைக்கான போராட்டத்திற்குத் தொடர்ந்து ஆதரவளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்தார்.

திருச்செங்கோடு அருகே ஏரியில் இறங்கி போராட்டம்.. மாற்று இடம் கோரி 100-க்கும் மேற்பட்டோர் வலியுறுத்தல்

MUST READ