Homeசெய்திகள்தமிழ்நாடுUPI தளம், வங்கிகள் மூலம் கடன் வழங்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுமா? எம்.பியின் கேள்விக்கு நிதியமைச்சர்...

UPI தளம், வங்கிகள் மூலம் கடன் வழங்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுமா? எம்.பியின் கேள்விக்கு நிதியமைச்சர் பதிலடி

-

- Advertisement -

நாடாளுமன்றத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., கேள்விக்கு ஒன்றிய நிதி அமைச்சகம் பதில் அளித்துள்ளாா்.UPI  தளம், வங்கிகள் மூலம் கடன் வழங்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுமா? எம்.பியின் கேள்விக்கு நிதியமைச்சர் பதிலடிUnified Payment Interface (UPI) முறையைப் போன்று Unified Lending Interface (ULI) என்ற ஒருங்கிணைந்த கடன் வழங்கும் தளத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் ஏதும் ஒன்றிய அரசு அல்லது ரிசர்வ் வங்கியிடம் உள்ளதா என்றும் UPI  தளம், வங்கிகள் மூலம் கடன் வழங்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுமா? அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) போன்ற பிற நிறுவனங்களும் இதில் சேர்க்கப்படுமா? என நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மாநிலங்களுக்கான நிதி அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, “இந்திய ரிசர்வ் வங்கி  Unified Lending Interface (ULI) எனப்படும் ஒருங்கிணைந்த கடன் வழங்கும் தளத்தின் திட்டம் 17 ஆகஸ்ட் 2023 அன்று தொடங்கியதாகவும், நிதி அமைப்பில் உள்ள பல்வேறு தரவுத் தரப்புகளில் இருந்து பெறப்படும் டிஜிட்டல் தகவல்களை கடன் வழங்குநர்களுக்கு தடையின்றி மற்றும் ஒருங்கிணைந்த முறையில் கிடைக்கச் செய்து, எளிதான மற்றும் விரைவான கடன் வழங்கலை செயல்படுத்துகிறது என்றும் இந்த அமைப்பின் மூலம் கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card), டிஜிட்டல் கால்நடை கடன் (Digital Cattle Loan), குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான (MSME) உத்தரவாதமில்லா கடன், வீட்டு கடன், தனிநபர் கடன், டிராக்டர் கடன், சிறு வணிகக் கடன் (Micro Business Loan), வாகனக் கடன், டிஜிட்டல் தங்கக் கடன், இ-முத்ரா கடன் (E-Mudra Loan), ஓய்வூதியக் கடன், பால் மற்றும் பால் உற்பத்தி பராமரிப்பு தொடர்பான கடன் ஆகிய 12 வகையான கடன் சேவைகளுக்கான செயல்முறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மேலும் 27.02.2026 நிலவரப்படி, 12 பொதுத்துறை வங்கிகள், 16 தனியார் துறை வங்கிகள், 3 சிறு நிதி வங்கிகள் (Small Finance Banks), 32 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (DCCBs), 13 பிராந்திய கிராம வங்கிகள் (RRBs), 1 மாநில கூட்டுறவு வங்கி, 23 வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) ஆகிய  100 கடன் வழங்கும் நிறுவனங்கள் இத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு தேவை தலைமை, மவுனம் அல்ல – நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

MUST READ