Homeசெய்திகள்இந்தியாமாணவர் போராட்டத்திற்குப் பணிந்தது மத்திய அரசு! ​ மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடி...

மாணவர் போராட்டத்திற்குப் பணிந்தது மத்திய அரசு! ​ மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடி ராஜினாமா

-

- Advertisement -

​​டெல்லி ஜந்தர் மந்தரில் வெடித்த மக்கள் போராட்டத்தினால் “10 ஆண்டு கால பாஜக ஆட்சியின் பிம்பம் உடைந்தது; இது மக்கள் எழுச்சியின் முதல் வெற்றி”  என ஜே.என்.யு மாணவர் பிரதிநிதி மதன் தெரிவித்துள்ளாா். ​மாணவர் போராட்டத்திற்குப் பணிந்தது மத்திய அரசு! ​ மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடி ராஜினாமா

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் எதிர்ப்பைத் தொடர்ந்து, மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு நடத்திய தீவிர போராட்டத்திற்குப் பணிந்து மத்திய அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

we-r-hiring

​கல்வித் துறை சீர்கேடுகள், தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்றது. தொடர் அழுத்தத்தின் காரணமாக கல்வி அமைச்சர் தனது பதவியை துறக்க நேரிட்டது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு விழுந்த மிகப்பெரிய அரசியல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

JNU மாணவர் மதன் சிறப்புப் பேட்டி
​இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு குறித்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) மாணவரும், ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் தீவிரமாகப் பங்காற்றியவருமான தோழர் மதன் ‘கூறியதாவது,மாணவர் போராட்டத்திற்குப் பணிந்தது மத்திய அரசு! ​ மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடி ராஜினாமா

​”கடந்த 10-12 ஆண்டுகளாகத் தன் பொறுப்புக்கூறலை (Accountability) முற்றிலுமாகத் தவிர்த்து வந்த மோடி அரசு, இன்று மக்களின் தீவிர எதிர்ப்பின் காரணமாகப் பணியத் தொடங்கியுள்ளது. தர்மேந்திர பிரதானின் ராஜினாமா என்பது ஒட்டுமொத்த மாணவர் மற்றும் மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த முதல் மிகப்பெரிய வெற்றியே ஆகும்.” ​அமைச்சர் தனது ராஜினாமா கடிதத்தில், ‘எதிர்க்கட்சிகளும் தேசவிரோத சக்திகளும் மாணவர்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றன’ எனக் குறிப்பிட்டிருப்பது குறித்துக் கேள்வி எழுப்பியபோது, ​”இந்த அரசு எப்போதும் தன் தவறுகளை ஒப்புக் கொள்வதில்லை. ஜாமியா மிலியா மற்றும் ஜே.என்.யு போராட்டங்களின் போது மாணவர்களை ‘அர்பன் நக்சல்கள்’, ‘பாகிஸ்தான் ஏஜென்ட்கள்’ என முத்திரையிட்டு ஒடுக்கப் பார்த்தார்கள். ஆனால் இம்முறை அந்த பொய்யான பிம்பம் சுக்குநூறாக உடைந்துவிட்டது” என மதன் சுட்டிக்காட்டினார்.

​அனைத்துத் தரப்பு மக்களின் திரட்சியும் சுயாதீன ஊடகங்களும்
​மக்களின் பங்கேற்பு: இப்போராட்டம் வெறுமனே மாணவர்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. 17-18 வயதுடைய இளைஞர்கள், குழந்தைகள், தாய்மார்கள், உழைக்கும் வர்க்கத்தினர், தொழிலாளர் அமைப்புகள் மற்றும் டெல்லியின் பல்வேறு சமூகப் பிரிவினர் இதில் நேரடியாகப் பங்கேற்றனர்.

மாணவர் போராட்டத்திற்குப் பணிந்தது மத்திய அரசு! ​ மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடி ராஜினாமா

​முக்கிய 3 கோரிக்கைகள்

  • ​மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் (நிறைவேற்றப்பட்டது).
  • ​தேர்வு முறைகேடு மற்றும் மன உளைச்சலால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ₹1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
  • ​போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து FIR வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.

ஜந்தர் மந்தரைச் சுற்றி 4 கி.மீ சுற்றளவில் இணைய சேவை முடக்கப்பட்டபோதிலும், சுயாதீன ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக உண்மைகள் மக்களிடம் சென்றடைந்தன. ​அமைச்சரின் ராஜினாமாவோடு போராட்டம் முடிவுக்கு வந்துவிடாது என்றும், எஞ்சிய கோரிக்கைகள் மற்றும் கல்வி முறை மறுசீரமைப்புக்காகப் போராட்டம் தொடர்ந்து நீடிக்கும் என்றும் மாணவர் அமைப்பினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேலும் 2 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் தொடரும்!” – CJP அமைப்பாளர் அபிஜீத் திப்கே அதிரடி அறிவிப்பு! 

MUST READ