- Advertisement -
சென்னையில் புறநகர் ரயில்களால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
சென்னை சேத்துப்பட்டு – சென்னை எழும்பூர் இடையே சிக்னல் கோளாறு காரணமாக, புறநகர் ரயில்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. பராமரிப்புப் பணிகள் காரணமாக 44 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த திடீர் சிக்னல் கோளாறால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
எழும்புரில் நடக்கும் பணிகள் காரணமாக தினமும் இதே இடத்தில் 1 மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாவதால் வேலைக்கு மற்றும் கல்வி நிலையங்களுக்குச் செல்வோர் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!

