HomeBreaking Newsவளிமண்டலக் கீழடுக்குத் தாழ்வுப்பாதை எதிரொலி: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு...

வளிமண்டலக் கீழடுக்குத் தாழ்வுப்பாதை எதிரொலி: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

-

- Advertisement -

தமிழகத்தில் கடலோரப்பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குத் தாழ்வுப்பாதை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தாழ்வுப்பாதை

we-r-hiring

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது; புதுவையில் மிக லேசான மழையும், காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையும் நிலவியுள்ளது.

குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் அதிபட்சமாக 294.0 மி.மீ (29 செ.மீ) மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து ஊத்து பகுதியில் 27 செ.மீ., காக்காச்சியில் 19 செ.மீ., காளிகேசத்தில் 14 செ.மீ. மற்றும் சிற்றாறு, கீரிப்பாறை பகுதிகளில் 13 செ.மீ. அளவு மழை பதிவாகியுள்ளது.

வெப்பநிலை நிலவரம்

  • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதுமில்லை. எனினும், அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது.

  • அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 40.4° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

  • குறைந்தபட்ச வெப்பநிலையாகச் சமவெளிப் பகுதியில் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் 22.4° செல்சியஸ் பதிவாகியுள்ளது. மலைப்பகுதியான கொடைக்கானலில் 12.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

  • 01-08-2026 (இன்று): கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருப்பூர் மலைப்பகுதிகள் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

  • சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் புதுவையில் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

  • 02-08-2026 முதல் 07-08-2026 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடகடலோர தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் தொடர வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதி முன்னறிவிப்பு

இன்று மற்றும் நாளை (01 மற்றும் 02-08-2026) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37°-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்:

  • தமிழக கடலோரப் பகுதிகள் & வங்கக்கடல்: ஆகஸ்ட் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் (இடையிடையே 60 கி.மீ. வேகம் வரையிலும்) வீசக்கூடும்.

  • அரபிக்கடல் பகுதிகள்: மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும் (இடையிடையே 65 கி.மீ. வரை), கேரளா – கர்நாடக கடலோரப் பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் சீண்டல்: போக்சோ சட்டத்தில் ஆய்வகப் பொறுப்பாளர் கைது – வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!

 

MUST READ