Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் வெற்றி: ரூ.15,300 கோடி முதலீடுகள் உறுதி – 10,000 பேருக்கு...

முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் வெற்றி: ரூ.15,300 கோடி முதலீடுகள் உறுதி – 10,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு!

-

- Advertisement -

முதலமைச்சர் விஜய் அவர்களின் அதிகாரப்பூர்வ இங்கிலாந்து (லண்டன்) பயணத்தின் போது, தமிழ்நாட்டிற்கு ரூ.15,300 கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்தாகியுள்ளன.முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் வெற்றி: ரூ.15,300 கோடி முதலீடுகள் உறுதி – 10,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு!

இதன் மூலம் மாநிலத்தில் சுமார் 10,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக உயர் மதிப்பு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

we-r-hiring

முக்கிய முதலீடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் விவரம் சம்வர்தனா மதர்சன் நிறுவனம் (ரூ.11,000 கோடி):
ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியில் சர்வதேச அளவில் முன்னணி வகிக்கும் ‘சம்வர்தனா மதர்சன்’ (Samvardhana Motherson) நிறுவனம் தனது ஐரோப்பிய மற்றும் லண்டன் கூட்டாளிகளுடன் இணைந்து ரூ.11,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் மூலம் வடிவமைப்பு, பொறியியல் மற்றும் உற்பத்தித் துறைகளில் 7,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

ஐரோப்பிய வாகன உதிரிபாக நிறுவனம் (ரூ.3,000 கோடி):
ஐரோப்பாவைச் சேர்ந்த மற்றொரு முன்னணி வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனம் ரூ.3,000 கோடி முதலீட்டைத் தமிழ்நாட்டில் மேற்கொள்வதற்கான விருப்பக் கடிதத்தை (LoI) அரசு அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளது.

ஆர்ன்ஸ்ட் & யங் – உலகளாவிய திறன் மையம் (ரூ.1,000 கோடி):
சர்வதேச ஆலோசனைக் நிறுவனமான Ernst & Young (EY) வாயிலாகச் சென்னையில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் புதிய ‘உலகளாவிய திறன் மையம்’ (Global Capability Centre – GCC) அமைக்கப்படவுள்ளது.

இதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த 2,000 உயர் தொழில்முறை வேலைவாய்ப்புகள் உருவாகும். வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் (ரூ.300 கோடி):

மின் உபகரண தயாரிப்பில் புகழ்பெற்ற லண்டனின் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடியில் உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது.

இதன் மூலம் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சிக்மா டெக்னாலஜி குழுமம்:
ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி நிறுவனம் சென்னை மற்றும் திருச்சியில் உள்ள தனது மையங்களை விரிவுபடுத்தி 600 பேருக்குப் பொறியியல் மற்றும் டிஜிட்டல் துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளது.

முதலமைச்சர் விஜய் மற்றும் தொழில் துறை கருத்து தமிழ்நாட்டை ஆசியாவின் முன்னணி தொழில் மற்றும் தொழில்நுட்ப மையமாக மாற்றுவதே நமது இலக்கு.

ஒவ்வொரு புதிய முதலீடும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும்; ஒவ்வொரு புதிய வேலைவாய்ப்பும் ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என இங்கிலாந்து பயணத்தின் வெற்றிகரமான ஒப்பந்தங்கள் குறித்து அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்தியில், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் இவ்வளவு பெரிய தொகையிலான முதலீடுகளையும் 10,000 வேலைவாய்ப்புகளையும் உறுதிசெய்துள்ளது தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தவெக நிலைப்பாடு பிடிக்காமல் கம்யூனிஸ்ட்கள் தனித்துப் போட்டி! முதலமைச்சரின் லண்டன் பயணம் சந்தேகத்திற்குரியது” – கே.டி. ராஜேந்திர பாலாஜி சாடல்!

MUST READ