Homeசெய்திகள்தமிழ்நாடு2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் நடைபெறும் முதல் இடைத்தேர்தல்: ஐந்து முனை போட்டியில் வெல்லப் போவது...

2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் நடைபெறும் முதல் இடைத்தேர்தல்: ஐந்து முனை போட்டியில் வெல்லப் போவது யார்?

-

- Advertisement -

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் களம் தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring
இடைத்தேர்தல் பின்னணி: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் சத்தியபாமா (தாராபுரம்) ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்தனர்.

மேலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், அத்தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான தொகுதிகளில் முதற்கட்டமாக தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெக-வில் மீண்டும் வாய்ப்பு – குதிரை பேர குற்றச்சாட்டு: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோருக்கே தவெக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு அப்பட்டமான குதிரை பேர அரசியல் என இடதுசாரி கட்சிகளான சிபிஐ மற்றும் சிபிஎம் கடுமையாகச் சுட்டிக்காட்டியுள்ளன. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், இடதுசாரிகள் இந்த இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன. (2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இடதுசாரிகள் தமிழ்நாட்டில் தனித்து களம் காண்பது இதுவே முதன்முறை).

வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கணக்குகள்: திமுக சார்பில் தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யாவும், மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமனும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

  • தவெக கூட்டணி: தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் (SSJVA) காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

  • அதிமுக – தேசிய ஜனநாயக கூட்டணி: இதில் அங்கம் வகித்த பாமக தங்களது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.

  • மற்ற கட்சிகள்: திமுக, அதிமுக, தவெக, இடதுசாரிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்தனியாக களம் காண்பதால் இங்கு வலுவான 5 முனை போட்டி உருவாகியுள்ளது.

3-வது இடத்தில் இருந்து வெற்றி சாத்தியமா? – தவெகவுக்கு பெரும் சோதனை: நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்த போதிலும், தாராபுரம் தொகுதியில் 3-ஆம் இடத்தையே பிடித்திருந்தது. மதுராந்தகம் தொகுதியை பொறுத்தவரை வெற்றி பெற்ற அதிமுகவிற்கும் 3-ஆம் இடம் பிடித்த திமுகவிற்கும் இடையே வெறும் 3% வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது.

கடந்த தேர்தலில் இரு தொகுதிகளிலுமே 3-ஆம் இடத்தில் இருந்த தவெக, தற்போது தங்கள் வசம் வந்த இரு தொகுதிகளையும் தக்கவைத்துக் கொள்ளுமா அல்லது அதிமுக மற்றும் திமுக இழந்த தொகுதிகளை மீட்குமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஒவ்வொரு வாக்கும் வெற்றி തോல்வியை தீர்மானிக்கும் என்பதால், அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த இடைத்தேர்தலை கௌரவப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றன.

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள்: திருவொற்றியூரில் 1,000 பேருக்கு பிரியாணி வழங்கிய சுதர்சனம்!

MUST READ