ஆன்மீகப் பயணமாக நேபாளம் சென்ற 49 தமிழர்களின் நிலை குறித்து 20 நாட்களாகியும் எந்தத் தகவலும் கிடைக்காததால், அவர்களின் உறவினர்கள் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உறவினர்களின் குற்றச்சாட்டுகளும் கொந்தளிப்பும்பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் திரண்டு அதிகாரிகளிடம் முறையிட முயன்றனர்.

தலைமைச் செயலாளரைச் சந்திக்கத் தடை: தலைமைச் செயலாளர் சாய் குமாரைச் சந்திக்க அனுமதி கோரி போராட்டக் குழுவினர் 3 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தனர்.
ஆனால், அவர்களைச் சந்திக்க அனுமதிக்காமல் காவல்துறையினர் காலம் தாழ்த்துவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
DNA பரிசோதனை தாமதம் ஏன்?: எங்களிடம் DNA பரிசோதனைக்காக இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுப் பல நாட்கள் ஆகிவிட்டன. அதற்கு பிறகும் முடிவுகள் என்ன ஆனது, அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பதை அரசு ஏன் தெளிவுபடுத்தவில்லை? என உறவினர்கள் கேள்வி எழுப்பினர்.
சீனாவுடன் பேச்சுவார்த்தை தேவை: சம்பவம் நடந்த இடம் நேபாளம் – சீனா எல்லைக்கு மிக அருகில் என்பதால், இந்திய மற்றும் தமிழக அரசுகள் சீனாவுடன் தூதரக ரீதியாக உடனடியாகப் பேசித் தேடுதல் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
கண்ணீரில் மூழ்கிய குடும்பங்கள் தமிழக அரசிடமிருந்து தங்களுக்குத் தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தால், அரசே தங்களிடம் வந்து தகவல் கேட்கும் அவல நிலை நிலவுவதாகப் போராட்டக்காரர்கள் வேதனை தெரிவித்தனர்.
குடும்பத்தில் ஒருவர் என்ன ஆனார் என்றே தெரியாமல் எங்களால் ஒரு வேளை உணவு கூட உண்ண முடியவில்லை.
எங்களது அன்பிற்குரியவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்ற ஒரே ஒரு உண்மையையாவது அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் தலைமைச் செயலக வாசலில் கண்ணீருடன் காத்திருந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பும் பதற்றமும் நிலவியது.
லண்டன் வாழ் தமிழர்களை இன்று சந்திக்கிறார் முதல்வர் விஜய்! வெளிநாட்டு பயணத்தில் முக்கிய நிகழ்வு
