சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, பல்வேறு விரைவு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


அதன்படி, ஆகஸ்ட் 5, 2026 முதல் ஆகஸ்ட் 20, 2026 வரை சில விரைவு ரயில்கள் சென்னை எழும்பூருக்குப் பதிலாகத் தாம்பரம் அல்லது மாம்பலத்தில் இருந்தே புறப்படும் மற்றும் தமது பயணத்தை அத்துடன் முடித்துக் கொள்ளும்.
தாம்பரம் / மாம்பலத்துடன் சேவை முடிவடையும் ரயில்கள் (ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 19 வரை):
தாம்பரம் வரை மட்டுமே இயங்கும் ரயில்கள்:
தஞ்சாவூர் – சென்னை எழும்பூர் ‘உழவன் விரைவு ரயில்’ (ரயில் எண்: 16866)
மங்களூரு சென்ட்ரல் – சென்னை எழும்பூர் ‘விரைவு ரயில்’ (ரயில் எண்: 16160)
கொல்லம் – சென்னை எழும்பூர் ‘அனந்தபுரி சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில்’ (ரயில் எண்: 20636)
சேலம் – சென்னை எழும்பூர் ‘விரைவு ரயில்’ (ரயில் எண்: 22154)
மாம்பலம் வரை மட்டுமே இயங்கும் ரயில்:
திருச்சிராப்பள்ளி – சென்னை எழும்பூர் ‘ராக்போர்ட் விரைவு ரயில்’ (ரயில் எண்: 12654)
தாம்பரத்திலிருந்து புறப்படும் ரயில்கள் (ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 20 வரை):
உழவன் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 16865): சென்னை எழும்பூருக்குப் பதிலாகத் தாம்பரத்திலிருந்து இரவு 11:00 (23:00) மணிக்குத் தஞ்சாவூர் நோக்கிப் புறப்படும்.
மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 16159): சென்னை எழும்பூருக்குப் பதிலாகத் தாம்பரத்திலிருந்து இரவு 11:40 (23:40) மணிக்கு மங்களூரு நோக்கிப் புறப்படும்.
அனந்தபுரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 20635): சென்னை எழும்பூருக்குப் பதிலாகத் தாம்பரத்திலிருந்து கொல்லம் நோக்கிப் புறப்படும்.
பயணிகளுக்கு வேண்டுகோள்:
மேற்கண்ட தேதிகளில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகள், ரயில்களின் இந்த தற்காலிக மாற்றங்களைக் கவனித்து அதற்கேற்பத் தங்களின் பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
“வாக்குறுதியை அரசு காப்பாற்ற வேண்டும்!” – மாணவர்கள் மீதான சட்ட நடவடிக்கை குறித்து சோனம் வாங்சுக்!
