Homeசெய்திகள்சென்னைதவெக எம்.எல்.ஏக்களை விமர்சித்து மேயர் பிரியா ஆவேசப் பேச்சு!

தவெக எம்.எல்.ஏக்களை விமர்சித்து மேயர் பிரியா ஆவேசப் பேச்சு!

-

- Advertisement -

முதலமைச்சர் விஜய்யின் சட்டப்பேரவைப் பேச்சு மற்றும் உடல்மொழியைக் கண்டித்து திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்துகொண்டு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதன் எம்.எல்.ஏக்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.தவெக எம்.எல்.ஏக்களை விமர்சித்து மேயர் பிரியா ஆவேசப் பேச்சு!

மேயர் பிரியாவின் முக்கியப் பேச்சு:
சட்டப்பேரவையில் பயிற்சி பெறுகிறார்கள்: “சட்டமன்றத்தில் தவெக எம்.எல்.ஏக்கள் அ, ஆ, இ, ஈ-னு எழுத்தக் கூட்டிப் படிச்சுக்கிட்டு இருக்காங்க.

we-r-hiring

மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல், சட்டப்பேரவையைத் தங்களின் பயிற்சிப் பள்ளியாக மாற்றியுள்ளனர்” என்று விமர்சித்தார்.

கெத்து காட்டும் பேச்சு: “நாங்களா எந்தப் பிரச்சினைக்கும் போக மாட்டோம்; ஆனா எங்களை நோக்கி வரப் பிரச்சினையை ஒருபோதும் சும்மா விடமாட்டோம்” என எச்சரித்தார்.

தலைவருக்காகக் குரல்: எமர்ஜென்சி காலத்தில் மிசாவில் கைது செய்யப்பட்டுத் தியாகம் செய்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைக் கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் விஜய் நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டிய அவர், “என் தலைவனைத் தொட்டவன் எவனாக இருந்தாலும் விடமாட்டோம்” என ஆவேசமாகப் முழங்கினார்.

MUST READ