சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக வந்த பெண்கள் மற்றும் வழக்கறிஞர் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
லாக்கப்பில் அடைத்து சித்ரவதை
சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்களைப் பார்ப்பதற்காக வள்ளி மற்றும் திருமலை ஆகிய இரு பெண்கள் ஆர்.கே.நகர் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

அப்போது, அங்கு இருந்த காவல்துறையினர் அந்த இரு பெண்களையும் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதுடன், வலுக்கட்டாயமாக லாக்கப்பில் அடைத்துச் சிறைவைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வழக்கறிஞருக்கும் தாக்குதல்
பெண்கள் இருவர் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுவதை அறிந்து, அது குறித்து தட்டிக்கேட்கச் சென்ற வழக்கறிஞர் ஜெயந்தி என்பவரையும் காவல்துறையினர் தாக்கியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் காவல் துறையினரின் இந்த அத்துமீறல் மற்றும் மனித உரிமை மீறல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் சென்னை காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
