Homeசெய்திகள்சென்னைமழையால் சேதமடைந்த சாலை: சரிந்து கிடந்த பேரிகார்டு மீது மோதி கார் விபத்து – பூந்தமல்லியில்...

மழையால் சேதமடைந்த சாலை: சரிந்து கிடந்த பேரிகார்டு மீது மோதி கார் விபத்து – பூந்தமல்லியில் பரபரப்பு!

-

- Advertisement -

பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையின் காரணமாகப் பல முக்கியச் சாலைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.மழையால் சேதமடைந்த சாலை: சரிந்து கிடந்த பேரிகார்டு மீது மோதி கார் விபத்து – பூந்தமல்லியில் பரபரப்பு!

ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பள்ளங்களினாலும், தேங்கியுள்ள மழைநீராலும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

we-r-hiring

இந்நிலையில், பூந்தமல்லி பிரதான சாலையில் போக்குவரத்துத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக்கட்டை (பேரிகார்டு) ஒன்று மழையினாலும் பலத்த காற்றினாலும் சரிந்து கீழே விழுந்து கிடந்துள்ளது.

போதிய வெளிச்சமின்மை மற்றும் எதிர்பாராதவிதமாகச் சரிந்து கிடந்த பேரிகார்டு தெரியாமல், அவ்வழியாக வந்த கார் ஒன்று அதன் மீது மோதிச் சிக்கிக்கொண்டது.

காரின் முன் பகுதி பேரிகார்டில் பலமாகச் சிக்கியதால் வாகனத்தை மேற்கொண்டு இயக்க முடியாமல் ஓட்டுநர் தவித்தார்.

தகவல் அறிந்து வந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சக வாகன ஓட்டிகள், பெரும் போராட்டத்திற்குப் பின் காரை மீட்க உதவினர்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் காரில் பயணித்தவர்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் இன்றி லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

மழைக்காலத்தில் சேதமடைந்த சாலைகளையும், ஆபத்தான முறையில் சரிந்து கிடக்கும் பேரிகார்டுகளையும் உடனடியாகச் சீரமைத்து, சீரான போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பூந்தமல்லி பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அக்டோபர் 3-ல் நல்ல செய்தி வரும்: அமைச்சர்களின் வாக்குறுதியை ஏற்றுத் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

MUST READ