Homeசெய்திகள்சென்னைராமாபுரத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சோகம்: சமரசம் பேச வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக்...

ராமாபுரத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சோகம்: சமரசம் பேச வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை!

-

- Advertisement -

சென்னை ராமாபுரத்தில் விநாயகர் சதுர்த்தி சாமி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட இருதரப்பு மோதலில், அரசுப் போக்குவரத்துக் கழக (MTC) ஓட்டுநர் ஒருவர் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.ராமாபுரத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சோகம்: சமரசம் பேச வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை!

ஊர்வலத்தில் வெடித்த வாக்குவாதம்
சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள அருள்மிகு ராஜ கணபதி ஆலய விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று இரவு சாமி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் 13-வது தெருவில் சென்றுகொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் ஊர்வலத்தைக் கடைசி வரை கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைக்கலப்பானது.

we-r-hiring

அப்போது அனீஸ் குமார் என்பவர் எதிர் தரப்பைச் சேர்ந்த புவனேஷ் என்பவரைத் தாக்கியுள்ளார். தகவலறிந்து வந்த ராமாபுரம் காவல் ஆய்வாளர் விஜயகுமாரி இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

நள்ளிரவில் திரண்ட கும்பல்
சம்பவம் முடிந்து அனீஸ் குமார் வீட்டிற்குச் சென்ற நிலையில், நள்ளிரவு 12:30 மணியளவில் புவனேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனீஸ் வீட்டின் முன் திரண்டு அவரை கீழே வருமாறு அழைத்துள்ளனர். அச்சமடைந்த அனீஸ், தனது நண்பர்களான சுரேஷ் மற்றும் சஞ்சய்க்குத் தகவல் தெரிவித்தார். அவர்களுடன் சேர்த்து அய்யப்பன்தாங்கல் பணிமனை MTC ஓட்டுநரான சீனிவாசன் (45) மற்றும் வீரா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பிற்கும் இடையே சமரசம் பேச முயன்றனர். ஆனால், பேச்சுவார்த்தை திடீரென மீண்டும் கடுமையான மோதலாக மாறியது.

மார்பில் குத்திக் கொலை
மோதலின் உச்சகட்டமாக, அமமுக முன்னாள் 154-வது வட்டச் செயலாளரான ஆனந்த் (35) என்பவர், சமரசம் செய்ய வந்த MTC ஓட்டுநர் சீனிவாசனின் மார்பில் பலமாக ஓங்கி குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள விக்னேஷ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சீனிவாசன் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கே.கே. நகர் இ.எஸ்.ஐ (ESI) மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசார் தீவிர விசாரணை & கைது நடவடிக்கை
தகவலறிந்து வளசரவாக்கம் சரக உதவி ஆணையாளர் செம்பேடு பாபு மற்றும் ராமாபுரம் காவல் ஆய்வாளர் விஜயகுமாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இக்கொலை வழக்கு தொடர்பாக அமமுக முன்னாள் நிர்வாகி ஆனந்த், அவரது நண்பர் ஜைரோ அப்பாஸ், அனீஸ் குமார், சுரேஷ், தீபன் உள்ளிட்ட இருதரப்பையும் சேர்ந்த முக்கிய நபர்களைப் பிடித்து ராமாபுரம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த இந்த நள்ளிரவு கொலை சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் மது அருந்தி தகராறு: பெண் காவலர், எஸ்.ஐ மீது தாக்குதல் நடத்திய தவெக நிர்வாகி உட்பட 3 பேர் கைது!

MUST READ