Homeசெய்திகள்அரசியல்2026 தேர்தல் - ”தென்னந்தோப்பு” சின்னத்தில் களமிறங்கும் சசிகலாவின் புதிய கட்சி

2026 தேர்தல் – ”தென்னந்தோப்பு” சின்னத்தில் களமிறங்கும் சசிகலாவின் புதிய கட்சி

-

- Advertisement -

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இந்தக் கட்சி போட்டியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.2026 தேர்தல் - ”தென்னந்தோப்பு” சின்னத்தில் களமிறங்கும் சசிகலாவின் புதிய கட்சி

வி.கே.சசிகலா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நெருங்கிய தோழியாக அறியப்பட்டவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவர் அதிமுகவில் இருந்து விலகிய நிலையில் இருந்தார். இந்நிலையில், பிப்ரவரி 24 ஆம் தேதி புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அவர் அறிவித்திருந்தார்.

we-r-hiring

தமிழக அரசியலில் முக்கியமான மாற்றமாக, புதிய கட்சியைத் தொடங்கிய சசிகலா அதன் பெயரை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுகவில் இருந்து விலகியிருந்த சசிகலா எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவிக்க நேர்ந்த நிலையில், அந்த காலகட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்ததால், பொதுச்செயலாளராக இருந்த சசிகலா முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தார்.

பின்னர் சசிகலா சிறையில் இருந்த காலத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் இணைந்து செயல்பட்டனர். அதன் பின்னர் சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இரட்டை தலைமையின் கீழ் அதிமுக ஆட்சி சில ஆண்டுகள் நடைபெற்றது. தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து விலகினர். சசிகலா மற்றும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவில் இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சந்தித்த பல தேர்தல்களில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாத நிலையில், கட்சியை வலுப்படுத்த தங்களை மீண்டும் இணைக்க முயற்சிகள் மேற்கொண்டதாக சசிகலா மற்றும் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருந்தனர். எனினும் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பிப்ரவரி 24 அன்று நடைபெற்ற ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் சசிகலா புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார். அப்போது அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவங்கள் இடம்பெற்ற கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறக் கொடியையும் அறிமுகப்படுத்தினார். ஆனால் அப்போது கட்சியின் பெயர் அறிவிக்கப்படவில்லை.

தற்போது சசிகலா தனது புதிய கட்சிக்கு “அனைந்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” என்று பெயரிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கட்சி “தென்னந்தோப்பு” சின்னத்தில் போட்டியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இந்தக் கட்சி போட்டியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உசிலம்பட்டியில் சசிகலா போட்டி? ஓபிஎஸ்-ன் மறைமுக ஆதரவு! இபிஎஸ் இதை எதிர்பார்க்கல! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

MUST READ