Homeசெய்திகள்அரசியல்"3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?".. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த...

“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!

-

- Advertisement -

“ஊழலற்ற ஆட்சி உறுதி… ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?” 3 மாத கால ஆட்சி, காவிரி விவகாரம் மற்றும் மாணவர் போராட்டம்… தவெக அரசு பற்றி மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன் அதிரடி அலசல்!"3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?".. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!தமிழகத்தில் தவெக அரசு அமைந்து மூன்று மாதங்களை நெருங்கி வரும் சூழலில், அரசின் செயல்பாடுகள், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ரீல்ஸ் வீடியோ சர்ச்சை மற்றும் நீட் தேர்வுக்கு எதிரான மாணவர் போராட்டம் உள்ளிட்ட பலதரப்பட்ட அரசியல் நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன் ‘சாட்டை’ (Saattai) ஊடகத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் விரிவாகப் பேசியுள்ளார்.

அரசு நிர்வாகமும், முதலமைச்சர் விஜய்யின் கண்டிப்பும்
முதலமைச்சர் விஜய் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதையும், கட்சி நிதி (Party Fund) வாங்குவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்திருப்பதையும் பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன் சுட்டிக்காட்டினார்.

we-r-hiring
  • அமைச்சர்கள் மத்தியில் பயம்: “கட்சி நிதி வாங்குவதில்லை என்ற முதலமைச்சரின் முடிவு அமைச்சர்கள் மத்தியில் ஒருவித பயத்தையும் கட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளது; இது வரவேற்கத்தக்க நல்ல முதல்படியாகும்.
  • முடங்கிக் கிடக்கும் கோப்புகள்: இருப்பினும், சில துறைகளில் சாதாரண கோப்புகள் கூடத் துரிதமாக நகர முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. அமைச்சக அலுவலகங்களின் யதார்த்தமான செலவுகள் மற்றும் செயல்பாடுகளைப் புரிந்துகொண்டு, விரைவான நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால் அரசுக்குச் சிக்கல் ஏற்படும்.”

"3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?".. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!

தலைமைச் செயலக ரீல்ஸ் சர்ச்சை: கண்டனம்!
தலைமைச் செயலக வளாகத்திற்குள் தவெக நிர்வாகி ஒருவர் கம்பீரமாக நடந்து செல்வதைப் பின் தொடர்ந்து சென்று வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ ஆக வெளியிட்ட விவகாரத்தைக் கடுமையாக விமர்சித்தார். “அரசு நிர்வாகத்தின் புனிதத்தன்மையும், உச்சகட்டப் பாதுகாப்பும் மிக்க தலைமைச் செயலகத்தில் இதுபோன்ற ரீல்ஸ் கலாச்சாரம் அனுமதிக்கப்படுவது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. அதிகாரப் மமதையைக் காட்டும் இதுபோன்ற செயல்களை முதலமைச்சர் விஜய் உடனடியாகத் தட்டிக்கேட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.”

காவிரி மேகதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கோரிக்கை
மேகதாட்டு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைக் மீட்டெடுக்க மூத்த தலைவர்களின் அனுபவத்தைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, துரைமுருகன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனுபவமிக்க தலைவர்களுடன் ஆலோசித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், தவெக மற்றும் அதிமுக அணிகள் இணைவது குறித்த விவாதங்கள் தற்போது எழுந்துள்ள நிலையில், முந்தைய ஆட்சிகளின் நிலைப்பாடுகளையும் தற்போதைய அரசியல் யதார்த்தத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது அவசியம் என்றார்.

"3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?".. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!

அரசியல் சார்பற்ற மாணவர் போராட்டம்!
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தைப் பாராட்டிப் பேசிய எக்ஸ்பி லட்சுமணன், “எந்தவொரு அரசியல் பின்புலமும் சார்பும் இல்லாமல் மாணவர்கள் தங்களின் சொந்தக் குரலில் ஒன்றிணைந்து நடத்திய போராட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. மாணவர்களின் இந்தப் போராட்டம் உச்சக்கட்டத்தைச் எட்டியிருந்த வேளையில், சுய விளம்பரத்திற்காகவும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும் சில பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் உள்ளே புகுந்தது ஏற்புடையதல்ல,” என்று தனது விமர்சனத்தைப் பதிவு செய்தார்.

மாணவர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை குறித்து அமித் ஷா விளக்கம் அளிக்கும் வரை நாடாளுமன்றம் இயங்காது: எதிர்க்கட்சிகள் திட்டவட்டம்!

MUST READ