- Advertisement -
கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது அவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறைத் தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கும் வரை, அவையைச் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் திங்கட்கிழமையன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.


மாணவர்கள் மீதான காவல்துறை அடக்குமுறைக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் நேரில் பதிலளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் நாடாளுமன்றத்தில் தொடர் அமளி நிலவி வருகிறது.
