spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தவெக சார்பில் சர்வதேச மகளிர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரம்…

தவெக சார்பில் சர்வதேச மகளிர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரம்…

-

- Advertisement -

மாமல்லபுரம் அருகே இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் சர்வதேச மகளிர் பங்கேற்கும்  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.தவெக சார்பில் சர்வதேச மகளிர் பங்கேற்கும்  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரம்…சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கழகத் தலைவர் அவர்கள் பங்கேற்கும் மகளிர் தின விழா, இன்று   மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இந்த மகளிர் தின விழாவில், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிருக்கான திட்டங்கள் குறித்து அக்கட்சியின் தலைவர் அறிவிக்கவுள்ளதாக  கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பவர்களுக்கு  பகுதியில் QR குறியீட்டுடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை. அனுமதிச் சீட்டு இல்லாத  பொதுமக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. உள்ளரங்கில் பெண்கள் அமரும் விதமாக  இருக்கைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

விஜய் மனைவி சங்கீதா எடுத்த அடுத்த அதிரடி முடிவு!!

we-r-hiring

MUST READ