நெல்லையில் நடிகா் விஜயின் முன்னாள் மேலாளா் பி.டி. செல்வகுமாா் விஜய் அரசியலுக்கு வந்ததே பெரிய தவறு: ஒரு நடிகரை நம்பி ரசிகர்கள் வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள்: 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தினர் டெபாசிட் இழந்து விடுவர் என பேட்டியளித்துள்ளாா்.
திமுக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளரும் நடிகர் விஜயின் முன்னாள் மேலாளருமான தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் நெல்லை வண்ணாரப்பேட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ”தமிழக முதலமைச்சர் குறித்து தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா நேற்று பேசிய கருத்துக்கள் தவறானவை கண்டனத்திற்குரியது தற்குறி என்பதை மீண்டும் மீண்டும் ஆதார் ஜூனாக நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். மோசடி செய்து முன்னேறியவர் ஆதவ் அர்ஜுனா.
6 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை ஆதவ் அர்ஜுனா விவாதத்திற்கு அழைக்க தகுதியில்லாதவர். விஜய் எந்த முடிவு எடுத்தாலும் அது எப்போதுமே தவறாகத்தான் இருக்கும். விஜய் ரசிகர்களுக்கு என் வேண்டுகோள் உங்கள் குடும்பத்தை, பணத்தை வீணாக்காதீர்கள் விஜயை நம்பி இளைய சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கிறது.

விஜய் உடன் சேர்ந்துள்ள அனைவரும் பீடைகள்தான் சனியன் சகடை , பான் பராக் ரவி போன்ற கேரக்டர்கள் தான் உள்ளது. தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள செங்கோட்டையன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகிறார். சிறுபிள்ளைகள் தனமாக செயல்படுவதாக குமுறி வருகிறார். ரஜினி பயந்து போய் அரசியலில் இருந்து வெளியேறி விட்டார். என ஆதவ் அர்ஜுனா சொல்கிறார் ரஜினிகாந்த் மிகப்பெரிய உழைப்பாளி அவர் உழைப்பால் முன்னேறி வந்தவர் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார்.
அவரைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது. ரஜினியுடன் 27 வருடங்களுக்கு மேலாக பழகியவன் நான் ரஜினிகாந்த் கூறிய ஒரு வார்த்தையால் மிகப்பெரிய ஆட்சி மாற்றமே ஏற்பட்டது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததே தவறு. செண்டிமெண்ட் என்றெல்லாம் அவருக்கு ஒன்றும் கிடையாது அவரது மனைவி நீதிமன்றத்தை நாடியுள்ளார் பெற்றோர்களை கூட நீதிமன்ற படிகளை ஏறி இறங்க வைத்தார். நடிகரை நம்பி ரசிகர்கள் வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள்.
பெற்றோர்களையும் குடும்பத்தினரையும் பார்க்க முடியாத இவர் மக்களை எப்படி பார்ப்பார். வருகின்ற தேர்தலில் விஜய் உட்பட 234 தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள். தற்குறி யார், தவறு செய்தவர்கள் யார் என்பது இந்த தேர்தலில் விடை கிடைக்கும். தனது வாழ்க்கை ஒரு நடிகையால் கெட்டுவிட்டது என நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா வழக்கு தொடர்ந்த பின்னரும் அவரை வெறுப்பேற்ற வேண்டும் என்று திரிஷாவுடன் பொதுமேடைக்கு ஏறி இறங்கியுள்ளார்” என்று கூறினார்.
அந்தர் பல்டி அடித்த புகழேந்தி – 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு அதரவு…
