spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsமீண்டும் ஒரு பாசப் போராட்டம்.... 'கும்கி 2' பட டீசர் வெளியீடு!

மீண்டும் ஒரு பாசப் போராட்டம்…. ‘கும்கி 2’ பட டீசர் வெளியீடு!

-

- Advertisement -

கும்கி 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.மீண்டும் ஒரு பாசப் போராட்டம்.... 'கும்கி 2' பட டீசர் வெளியீடு!

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு ‘கும்கி’ திரைப்படம் வெளியானது. ஒரு இளைஞனுக்கும், யானைக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து பிரபு சாலமன், ‘கும்கி 2’ படத்தை இயக்கியுள்ளார். மீண்டும் ஒரு பாசப் போராட்டம்.... 'கும்கி 2' பட டீசர் வெளியீடு!இந்த படத்தில் அறிமுக நடிகர் மதி கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து அர்ஜுன் தாஸ், ஸ்ரிதா ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பென் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. நிவாஸ் கே பிரசன்னாவின் இசையிலும், எம். சுகுமாரின் ஒளிப்பதிவிலும் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி தற்போது படக்குழுவினர் இந்த படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். இந்த டீசருக்கு சசிகுமார் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். இந்த டீசரில், பள்ளத்தில் விழுந்த குட்டி யானை ஒன்றை சிறுவன் ஒருவன் காப்பாற்றுகின்றான்.

we-r-hiring

https://youtu.be/l4OjEXIV7D4?si=UNQxRyvBedeplYdV

அந்த சிறுவன், அந்த குட்டி யானையை பாசத்துடன் வளர்க்கிறான். அவன் இளைஞனாக வளர்ந்த பிறகு, ஒரு கட்டத்தில் அந்த யானைக்கு பிரச்சனை ஏற்பட அதிலிருந்து அந்த யானையை காப்பாற்ற போராடுவது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் போல் தெரிகிறது. இதில் அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்திருப்பது போல் காட்டப்பட்டுள்ளது. இந்த டீசர் தற்போது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்திலும் இளைஞனுக்கும், யானைக்கும் இடையிலான பாசப் போராட்டம் எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ