Homeசெய்திகள்விளையாட்டுஇங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்டீபன் பிளெமிங்கிற்கு மைக்கேல் வாகன் எச்சரிக்கை!

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்டீபன் பிளெமிங்கிற்கு மைக்கேல் வாகன் எச்சரிக்கை!

-

- Advertisement -

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெமிங்கிற்கு, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் எம்.எஸ். தோனியுடன் இணைந்து பல சாதனைகளைப் படைத்த பிளெமிங்கிற்கு, இங்கிலாந்தில் தோனியைப் போன்ற ஒரு வலுவான கேப்டன் கிடைப்பது கடினம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து

we-r-hiring

மைக்கேல் வாகனின் எச்சரிக்கையும், காரணமும்

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்து, சிறந்த மேலாளராகத் திகழ்ந்த ஸ்டீபன் பிளெமிங் (53), கடந்த 2026 ஐபிஎல் தொடருக்குப் பிறகு அப் பதவிலிருந்து விலகினார். இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, ‘தி டெலிகிராப்’ நாளிதழில் மைக்கேல் வாகன் எழுதியுள்ளதாவது: “ஸ்டீபன் பிளெமிங் மிகவும் மதிக்கத்தக்கவர் மற்றும் சிறந்த மேலாளர் மற்றும் தந்திரவாதி என்பதில் சந்தேகமில்லை.

ஐபிஎல் தொடரில் நான் அவரை நேரடியாகக் கவனித்துள்ளேன். ஆனால், இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் அவர் எதிர்கொள்ளப் போகும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று, சிஎஸ்கே அணியில் இருந்தது போல் கப்பலைத் தாங்கிப் பிடிக்க இங்கு எம்.எஸ். தோனியைப் போன்ற ஒரு கேப்டன் அவரிடம் இல்லை என்பதுதான்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், “சிஎஸ்கே அணியில் பிளெமிங் சிறந்த மேலாளராகச் செயல்பட்டாலும், களத்தில் ஆட்டத்தை நகர்த்துபவராகவும் மூளையாகச் செயல்பட்டவராகவும் தோனிதான் இருந்தார்.

மேலும், எரிக் சைமன்ஸ் போன்ற சிறந்த பந்துவீச்சு பயிற்சியாளர்களின் பலம் அங்கே அவருக்குக் கிடைத்தது. அணியின் வேகத்தை விட பந்துவீச்சின் துல்லியத்திறன் மீது பிளெமிங் அதிக கவனம் செலுத்துவார். இங்கிலாந்து டெஸ்ட் அணியிலும் அவுட் அண்ட் அவுட் வேகம் என்பதைத் தாண்டி, பந்துவீச்சுத் திறன் மீண்டும் முக்கியத்துவம் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றும் வாகன் குறிப்பிட்டுள்ளார்.

ஜோ ரூட் மீண்டும் கேப்டன் பதவிக்கு நியமனம்

இதனிடையே, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக மூத்த பேட்ஸ்மேன் ஜோ ரூட் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 2017 முதல் 2022 வரை இங்கிலாந்து அணியை வழிநடத்தியுள்ள ஜோ ரூட், 65 டெஸ்ட் போட்டிகளுக்குத் தலைமை தாங்கி 27 வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ள இங்கிலாந்தின் மிக அனுபவம் வாய்ந்த டெஸ்ட் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளெமிங்கின் பொறுப்பேற்பு எப்போது?

பாகிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் தொடருக்கு மார்க்கஸ் டிரெஸ்கோதிக் இடைக்காலப் பயிற்சியாளராகச் செயல்படுவார். அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் இறுதியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் மூலம் ஸ்டீபன் பிளெமிங் தனது அதிகாரப்பூர்வ பயிற்சியாளர் பணியைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!

MUST READ