Homeசெய்திகள்விளையாட்டுஐபிஎல் 2027: டெல்லி கேப்பிடல்ஸ் தலைமை பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமனம்!

ஐபிஎல் 2027: டெல்லி கேப்பிடல்ஸ் தலைமை பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமனம்!

-

- Advertisement -

ஐபிஎல் 2027 சீசனுக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்தை டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

we-r-hiring

கடந்த 2025 மற்றும் 2026 ஐபிஎல் சீசன்களில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இதையடுத்து, தலைமை பயிற்சியாளராக இருந்த ஹேமங் பதானியை அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து, 2027 சீசனுக்கான புதிய தலைமை பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் அணிக்கு தலைமை பயிற்சியாளராக அவர் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.

டெல்லி அணியுடன் நீண்டகால தொடர்பு

சவுரவ் கங்குலிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் நீண்டகால தொடர்பு உள்ளது. 2019-ம் ஆண்டு அணியின் ஆலோசகராக இணைந்த அவர், பின்னர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளின் கிரிக்கெட் இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

தற்போது தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ள கங்குலி, புதிய சீசனில் வலுவான மற்றும் அச்சமற்ற அணியை உருவாக்குவதே தனது நோக்கம் என தெரிவித்துள்ளார். அணி வீரர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

டெல்லி அணியின் புதிய அத்தியாயம்

2026 ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6-வது இடத்தைப் பிடித்தது. இதையடுத்து, 2027 சீசனுக்கு முன்னதாக அணியின் பயிற்சி மற்றும் நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. அந்த அணிக்கு தனது அனுபவம் மற்றும் தலைமைத்துவ திறன் மூலம் முதல் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க கங்குலி முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

44 ஆண்டு கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் ஹாக்கியில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தது இந்தியா!

MUST READ