Homeசெய்திகள்தமிழ்நாடு'மார்க் ஆண்டனி' படத்திற்கு லஞ்சம் கேட்ட விவகாரம்- விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு!

‘மார்க் ஆண்டனி’ படத்திற்கு லஞ்சம் கேட்ட விவகாரம்- விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு!

-

 

‘மார்க் ஆண்டனி’ படத்தின் இந்திப் பதிப்பைத் தணிக்கை செய்ய அதிகாரிகள் ரூபாய் 6.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக நடிகர் விஷால் பேட்டி ஒன்றில் புகார் கூறியிருந்தார். இது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அக்.1- ல் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

நடிகர் விஷாலின் புகார் மீது விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “திரைப்படத் தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் அளித்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தணிக்கை அதிகாரிகள் மீதான புகார் துரதிருஷ்டவசமானது.

கார் மீது பேருந்து ஏறியதில் இருவர் பலி!

ஊழல், லஞ்சத்தை அரசுப் பொறுத்துக் கொள்ளாது; இதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் மூத்த அதிகாரி புகார் மீது விசாரணை நடத்த மும்பைக்கு அனுப்பப்பட்டார். தணிக்கை வாரியம் மீது வேறு ஏதேனும் புகார்கள் இருந்தால் jsfilms.inb@nic.in என்ற மின்னஞ்சலில் புகார் அளிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ