spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதியாகத்தின் திருவிளக்கு அன்னையரே...அவர்களை எந்நாளும் போற்றுவோம் - அன்புமணி!

தியாகத்தின் திருவிளக்கு அன்னையரே…அவர்களை எந்நாளும் போற்றுவோம் – அன்புமணி!

-

- Advertisement -

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

தியாகத்தின் திருவிளக்கு அன்னையரே…அவர்களை எந்நாளும் போற்றுவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், உலகில் மெழுகுவர்த்திகளே வெட்கப்படும் அளவுக்கு ஈகங்களைச் செய்வர்கள் அன்னையர் தான். உயிர் கொடுத்தது மட்டுமின்றி உண்டி கொடுத்தது, ஊக்கம் கொடுத்தது, உயர்வு கொடுத்தது எல்லாமே அன்னையர் தான். தாம் பெற்ற வலிகளையும், வேதனைகளையும் தமது குழந்தைகள் பெறக்கூடாது, தாம் பெறாத பெருமைகளையும், உயர்வுகளையும், சிறப்புகளையும் தமது பிள்ளைகள் பெற வேண்டும் என்ற சிந்தனை அன்னையைத் தவிர எவருக்கும் வராது.

எப்படிப் பார்த்தாலும் தியாகத்தின் திருவிளக்கு அவர்கள் தான். உலக அன்னையர் நாளில் அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம். அவர்களை மனதில் குடியமர்த்தி எந்நாளும் வணங்குவோம். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ