2025-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் பல முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளனர். குறிப்பாக சமந்தா மற்றும் விஷால் ஆகியோரின் அறிவிப்புகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. இந்த ஆண்டில் நடந்த முக்கியமான திருமணங்கள் மற்றும் நிச்சயதார்த்தங்கள் குறித்த தொகுப்பு இதோ:
2025-ல் நடந்த திருமணங்கள் :
1. சமந்தா – ராஜ் நிடிமோரு (Samantha & Raj Nidimoru)
இந்த ஆண்டின் மிகவும் ஆச்சரியமான மற்றும் பேசப்பட்ட திருமணம் இதுவே. முதல் திருமண முறிவுக்குப் பின்னர் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 1, 2025 அன்று நடிகை சமந்தா, The Family Man இயக்குனர் ராஜ் நிடிமோருவை கரம்பிடித்தார். கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தில் (Isha Foundation) மிகவும் எளிமையான முறையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாகவும், எளிமையான முறையில் திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

2. கிஷன் தாஸ் – சுசித்ரா (Kishan Das & Sushitra)
’முதலில் நீ முடிவில் நீ’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மற்றும் யூடியூபர் கிஷன் தாஸ், தனது நீண்ட நாள் காதலியான சுசித்ராவை ஜனவரி 2025-ல் கரம் பிடித்தார்.
3. பிரியங்கா தேஷ்பாண்டே – வசி (Priyanka Deshpande & Vasi)
பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் வசி ஜோடி கடந்த ஏப்ரல் 16, 2025 அன்று தங்களது திருமண வாழ்வைத் தொடங்கினர்.
2025-ல் நடந்த நிச்சயதார்த்தங்கள்:
1. விஷால் – சாய் தன்ஷிகா (Vishal & Sai Dhanshika)
நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்வேன் என்று சபதம் எடுத்திருந்த நடிகர் விஷால், தனது 48-வது பிறந்தநாளான ஆகஸ்ட் 29, 2025 அன்று நடிகை சாய் தன்ஷிகாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இவர்கள் 15 ஆண்டுகால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2. பார்வதி நாயர் – ஆஷ்ரித் அசோக் (Parvati Nair & Aashrith Ashok)
’கோட்’ (GOAT) படத்தில் நடித்த நடிகை பார்வதி நாயர், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருடன் பிப்ரவரி 5, 2025 அன்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
3. ரித்விகா – வினோத் (Riythvika – Vinod)
மெட்ராஸ், கடாவர், டார்ச்லைட் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவரும், பிக்பாஸ் சீசன் 2 டைட்டில் வின்னருமான நடிகை ரித்விகா, வினோத் என்பவருடன் தனது திருமண அறிவிப்பை வெளியிட்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.


