Homeதொழில்நுட்பம்டிராய் உத்தரவைத் தொடர்ந்து ரூ.147-ல் புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம் செய்த ஜியோ! டேட்டா இல்லாமல்...

டிராய் உத்தரவைத் தொடர்ந்து ரூ.147-ல் புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம் செய்த ஜியோ! டேட்டா இல்லாமல் அன்லிமிடெட் கால்ஸ்!

-

- Advertisement -

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மொபைல் டேட்டா வசதி இல்லாமல் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். சேவைகளை மட்டும் வழங்கும் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டங்களின் ஆரம்ப விலை ரூ.147 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களைத் தொடர்ந்து ஜியோவும் வாய்ஸ்-ஒன்லி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் – விலை மற்றும் வேலிடிட்டி

ஜியோவின் புதிய வாய்ஸ்-ஒன்லி திட்டங்கள் குறைந்தபட்சம் 22 நாட்கள் முதல் அதிகபட்சம் 336 நாட்கள் வரை வேலிடிட்டி வழங்குகின்றன.

  • ரூ.147 திட்டம்: 22 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 300 எஸ்.எம்.எஸ்.
  • ரூ.177 திட்டம்: 28 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 300 எஸ்.எம்.எஸ்.
  • ரூ.196 திட்டம்: 30 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 300 எஸ்.எம்.எஸ்.
  • ரூ.197 திட்டம்: ஒரு காலண்டர் மாத வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 300 எஸ்.எம்.எஸ்.
  • ரூ.448 திட்டம்: 84 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 1,000 எஸ்.எம்.எஸ்.
  • ரூ.1,748 திட்டம்: 336 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 3,600 எஸ்.எம்.எஸ்.

இந்தத் திட்டங்களில் மொபைல் டேட்டா வசதி சேர்க்கப்படவில்லை. குறிப்பாக ரூ.196 திட்டம் 30 நாட்களுக்கானது. ரூ.197 திட்டம் ரீசார்ஜ் செய்த தேதியிலிருந்து அடுத்த மாதத்தின் அதே தேதிவரை காலண்டர் மாத அடிப்படையில் செயல்படும்.

யாருக்கு இந்தத் திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும்?

மொபைல் இணைய வசதியை அதிகம் பயன்படுத்தாதவர்கள், அடிப்படை அழைப்புகளுக்கு மட்டும் செல்போன் பயன்படுத்துபவர்கள், மூத்த குடிமக்கள், ஃபீச்சர் போன் வைத்திருப்பவர்கள் மற்றும் இரண்டாம் நிலை சிம் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு இந்தத் திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

ஏற்கெனவே வீட்டிலும் அலுவலகத்திலும் வைஃபை வசதி இருப்பதால் மொபைல் டேட்டா தேவையில்லை என்று கருதுபவர்களும் இந்தத் திட்டங்களைத் தேர்வு செய்யலாம்.

டேட்டா தேவைப்பட்டால் என்ன செய்வது?

இந்த வாய்ஸ்-ஒன்லி திட்டங்களில் இணைய வசதி கிடையாது. இருப்பினும், இணையத்தைப் பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் தனியாக டேட்டா பேக்குகளை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதன் மூலம் வாய்ஸ் சேவையுடன் தேவைக்கேற்ப டேட்டாவையும் பயன்படுத்த முடியும்.

எப்படி ரீசார்ஜ் செய்வது?

ஜியோ வாடிக்கையாளர்கள் MyJio செயலி அல்லது ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள ரீசார்ஜ் பிரிவுக்குச் சென்று, ‘TRAI Mandated Packs’ என்ற பிரிவில் வாய்ஸ்-ஒன்லி திட்டங்களைத் தேர்வு செய்யலாம்.

டேட்டா பயன்பாடு இல்லாத வாடிக்கையாளர்கள் தேவையற்ற இணையச் சேவைகளுக்குக் கட்டணம் செலுத்தாமல், தங்களுக்குத் தேவையான அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி வசதிகளை மட்டும் பெறும் வகையில் இந்தப் புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

99 நாடுகளில் ஐபோன் பயனர்களுக்கு ஸ்பைவேர் தாக்குதல் எச்சரிக்கை! ஆப்பிள் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

MUST READ