Homeசெய்திகள்சினிமாமணிகண்டன் நடிக்கும் 'குடும்பஸ்தன்'.... இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

மணிகண்டன் நடிக்கும் ‘குடும்பஸ்தன்’…. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

-

- Advertisement -

நடிகர் மணிகண்டன் தமிழ் சினிமாவில் ஜெய் பீம் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்படுபவர். மணிகண்டன் நடிக்கும் 'குடும்பஸ்தன்'.... இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!அதைத் தொடர்ந்து இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இவரு ஹீரோவாக நடித்திருந்த குட் நைட், லவ்வர் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அடுத்தது மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் மீதான எதிர்பார்க்கும் அதிகமாக இருந்து வந்தது. அதன்படி நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார் மணிகண்டன். இந்த படத்திற்கு குடும்பஸ்தன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை சினிமாக்காரன் என்ற நிறுவனம் தயாரிக்க வைஷாக் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சுஜித் சுப்ரமணியம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 12) இந்த படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ