நடிகர் விஷால், எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா திரைப்படம் வெளியானது. சுந்தர்.சி -யின் இயக்கத்திலும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்தின் தயாரிப்பிலும் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று தமிழ்நாடு முழுவதும் வெற்றி நடை போட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் இப்படம் முதல் 5 நாட்களில் ரூ. 25 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து விஷால் மார்க் ஆண்டனி 2, இரும்புத்திரை 2, துப்பறிவாளன் 2 ஆகிய படங்களில் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையில் நடிகர் விஷால் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு உடல் நலம் தேறிய விஷால் இன்று சென்னையில் நடைபெறும் மதகஜராஜா படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்டுள்ளார். மேலும் விஷால், புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்த நாளான இன்று (ஜனவரி 17) தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
- Advertisement -