Homeசெய்திகள்சினிமா'கைதி 2' படத்தில் இணையும் 'சர்தார் 2' பட நடிகை.... லேட்டஸ்ட் அப்டேட்!

‘கைதி 2’ படத்தில் இணையும் ‘சர்தார் 2’ பட நடிகை…. லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

கைதி 2 படத்தில் சர்தார் 2 பட நடிகை ஒருவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.'கைதி 2' படத்தில் இணையும் 'சர்தார் 2' பட நடிகை.... லேட்டஸ்ட் அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கைதி. ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதே சமயம் இந்த படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சின் முதல் படமாகும். இதைத்தொடர்ந்து வெளியான விக்ரம், லியோ ஆகிய படங்களில் கைதி படத்தின் குறியீடுகள் இடம் பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அந்த அளவிற்கு கைதி படத்தில் ஷாம் சி எஸ் போட்டிருந்த பிஜிஎம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், கார்த்தி கூட்டணியில் கைதி 2 திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தின் ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. 'கைதி 2' படத்தில் இணையும் 'சர்தார் 2' பட நடிகை.... லேட்டஸ்ட் அப்டேட்!மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இந்த ஆண்டிற்குள் தொடங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கார்த்தியின் சர்தார் 2 படத்தில் நடித்து வரும் ரஜிஷா விஜயன், கைதி 2 திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ