மாதவன் மற்றுமொரு பயோபிக் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடிகர் மாதவனுக்கு பயோபிக் படங்கள் நடிப்பதில் ஆர்வம் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. இதற்கு முன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான Rocketry:The Nambi Effect படத்தை இயக்கியிருந்தார். படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
தற்போது ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் எடிசன் என்று அன்புடன் அழைக்கப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு 1937-ல் டி பாலசுந்தரம் நாயுடுவுடன் இணைந்து இந்தியாவின் முதல் உள்நாட்டு மோட்டாரை அவர் உருவாக்கினார்.
ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படத்தில் தான் மாதவன் நடிக்க இருக்கிறார். படத்தின் தயாரிப்பாளர்கள், ஜி.டி. நாயுடு அறக்கட்டளை நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை மற்றும் சாதனைகளின் வரலாற்றை உருவாக்க தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளனர். படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.