பொன்னியின் செல்வன் முதல் பாகம் மீண்டும் தியேட்டர்களில் ரீரிலீஸ் ஆக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன்.

படத்தின் முதல் பாகம் வெளியாக ரசிகர்கள் மத்தியில அமோக வரவேற்பு பெற்றது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.
இரண்டு பாகங்களுக்கும் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். பாடல்கள் ஒவ்வொன்றும் அந்த ரகம்.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான நேரத்தில் இரண்டு வாரங்களுக்கு தியேட்டர்கள் நிரம்பிய காணப்பட்டன. மக்கள் அந்த அளவுக்கு படத்திற்கு வரவேற்பு கொடுத்தனர்.
அமேசான் ப்ரைம் தளத்திலும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை காண முடியும். இந்நிலையில் இரண்டாம் பாகம் இன்னும் சில நாட்களில் வெளியாக இருப்பதால் முதல் பாகத்தை மக்கள் பார்ப்பதற்கு ஏற்றவாறு ஏப்ரல் 21-ம் தேதி முதல் சில தியேட்டர்களில் முதல் பாகத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
மணிசாரிடம் ஒரு விருப்பம் தெரிவித்தேன்.PS2-வுடன் PS1-ஐயும் ஒரு சில இடங்களில் வெளியிட்டால் தொடர்ச்சியாகப் பார்க்க வசதியாக இருக்குமென…
அவர் பதில்…. ………|
| pic.twitter.com/tlC81sGLMJ— Radhakrishnan Parthiban (@rparthiepan) April 5, 2023
இது குறித்து பதிவிட்டுள்ள பார்த்திபன் “மணிசாரிடம் ஒரு விருப்பம் தெரிவித்தேன்.PS2-வுடன் PS1-ஐயும் ஒரு சில இடங்களில் வெளியிட்டால் தொடர்ச்சியாகப் பார்க்க வசதியாக இருக்குமென… அவர் பதில்”