பாஜகவுக்கு பயந்து காங்கிரசை கைவிட்டு விட்டார் அமைச்சர் மனோ தங்கராஜ் என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது கூட்டணியில் .
ராகுல் காந்தி எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் குமரி மாவட்ட பாஜக அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் இருதரப்பினரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ் போராட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் தங்கள் பக்கம் நிற்பார் என்று கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் எதிர்பார்த்த து. ஆனால் மனோ தங்கராஜ் இடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, காங்கிரஸ் அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டது தவறு. சட்டத்தை கையில் எடுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று சொன்னது காங்கிரசாரை அதிர வைத்திருக்கிறது.
தங்களுக்கு ஆதரவாக நிற்காமல் இப்படி கைவிட்டு விட்டாரே அமைச்சர் என்று அவர்கள் புலம்புகின்றனர். அமைச்சர் இப்படி ஜகா வாங்கியதற்கு காரணம் இருக்கிறது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் சமய மாநாடு விவகாரத்தில் தலையிட்டு பாஜகவிடம் சிக்கிக் கொண்ட மனோ, அந்த விவகாரத்தில் தலைமை இடம் குட்டுப்பட்டு விட்டார். அந்த அனுபவம் தான் இப்போது பேசி இருக்கிறது என்கிறார்கள்.