Homeசெய்திகள்சினிமாஃபுல் மீல்ஸ் ரெடி.... விஜய் சேதுபதியின் 52வது படம் குறித்த புதிய அறிவிப்பு!

ஃபுல் மீல்ஸ் ரெடி…. விஜய் சேதுபதியின் 52வது படம் குறித்த புதிய அறிவிப்பு!

-

- Advertisement -

விஜய் சேதுபதியின் 52 ஆவது படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஃபுல் மீல்ஸ் ரெடி.... விஜய் சேதுபதியின் 52வது படம் குறித்த புதிய அறிவிப்பு!

விஜய் சேதுபதி தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே காந்தி டாக்ஸ், ஏஸ், ட்ரெயின் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அடுத்தது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இதற்கிடையில் இவர் கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 52 வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.ஃபுல் மீல்ஸ் ரெடி.... விஜய் சேதுபதியின் 52வது படம் குறித்த புதிய அறிவிப்பு! அதன்படி இந்த படத்திற்கு தற்காலிகமாக VJS 52 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிக்க அவருடன் இணைந்து நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. ஃபுல் மீல்ஸ் ரெடி.... விஜய் சேதுபதியின் 52வது படம் குறித்த புதிய அறிவிப்பு!தற்போது இந்த படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று (மே 1) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இந்த படம் தொடர்பான புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற மே 3ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.

MUST READ