spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ரெட்ரோ' படத்திலிருந்து 'Love Detox' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு!

‘ரெட்ரோ’ படத்திலிருந்து ‘Love Detox’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு!

-

- Advertisement -

ரெட்ரோ படத்திலிருந்து Love Detox பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. 'ரெட்ரோ' படத்திலிருந்து 'Love Detox' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு!

கடந்த மே 1ஆம் தேதி சூர்யா நடிப்பில் உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ரெட்ரோ. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்திருந்தார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்த படத்தில் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். காதல் கலந்த ஆக்சன் கதைக்களத்தில் வெளியான இந்த படத்தை சூர்யாவும், கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. எனவே இரண்டாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் வசூல் இனிவரும் நாட்களிலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே ஆகியோரின் நடிப்பு பாராட்டப்பட்டுள்ளது. இது தவிர படத்தில் இடம்பெற்ற சிங்கிள் ஷாட் காட்சிகளும், கனிமா பாடலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

we-r-hiring

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து Love Detox பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கு நடிகை ஸ்ரேயா நடனமாடியிருந்தார். அடுத்தது இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம், விது, பிரகாஷ்ராஜ் ஆகியோரின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ