Homeசெய்திகள்சினிமாசத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியின் 'மெட்ராஸ் மேட்னி'.... ரிலீஸ் தேதி மாற்றம்!

சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியின் ‘மெட்ராஸ் மேட்னி’…. ரிலீஸ் தேதி மாற்றம்!

-

- Advertisement -

சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியின் மெட்ராஸ் மேட்னி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியின் 'மெட்ராஸ் மேட்னி'.... ரிலீஸ் தேதி மாற்றம்!

திரைத்துறையில் கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருபவர் சத்யராஜ். இவர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். அதேசமயம் நடிகர் காளி வெங்கட் ஒரு நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர்கள் தற்போது அடுத்தடுத்த படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் காளி வெங்கட், சத்யராஜ் உடன் இணைந்து மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திகேயன் மணி இயக்கியிருக்கிறார். இதில் ரோஷினி ஹரிபிரியன், ஜார்ஜ் மரியான், விஷ்வா, ஷெலி ஆகியோரும் நடித்துள்ளனர். கே.சி. பாலசரங்கன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க டிரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை வழங்குகிறது. சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியின் 'மெட்ராஸ் மேட்னி'.... ரிலீஸ் தேதி மாற்றம்!ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் இந்த படம் வருகின்ற மே 23ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படமானது 2025 ஜூன் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இனிவரும் நாட்களில் டீசர், ட்ரைலர் போன்ற அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ