Homeசெய்திகள்சினிமா'96 பார்ட் 2'வில் ஏற்பட்ட சிக்கல்.... அடுத்த படத்திற்காக அந்த நடிகரை டார்கெட் செய்யும் பிரேம்...

’96 பார்ட் 2’வில் ஏற்பட்ட சிக்கல்…. அடுத்த படத்திற்காக அந்த நடிகரை டார்கெட் செய்யும் பிரேம் குமார்!

-

- Advertisement -

இயக்குனர் பிரேம்குமாரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.96 பார்ட் 2வில் ஏற்பட்ட சிக்கல்.... அடுத்த படத்திற்காக அந்த நடிகரை டார்கெட் செய்யும் பிரேம் குமார்!

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் 96 திரைப்படம் வெளியானது. மென்மையான காதல் கதையில் வெளியான இந்த படத்தை இயக்குனர் பிரேம்குமார் இயக்கி இருந்தார். தன்னுடைய முதல் படத்திலேயே பெயரையும் புகழையும் பெற்ற இவர், அடுத்ததாக மெய்யழகன் திரைப்படத்தையும் இயக்கி மீண்டும் வெற்றி கண்டார். இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் 96 பாகம் 2 திரைப்படத்தை இயக்கத்திட்டமிட்டிருந்தார். அதன்படி ஸ்கிரிப்ட் பணிகளை முடித்த பிரேம்குமார் விஜய் சேதுபதியை அணுகிய போது அவர், 96 பார்ட் 2 படத்திற்கு பெரிய அளவில் ஆர்வம் காட்ட வில்லையாம். 96 பார்ட் 2வில் ஏற்பட்ட சிக்கல்.... அடுத்த படத்திற்காக அந்த நடிகரை டார்கெட் செய்யும் பிரேம் குமார்!எனவே பிரேம் குமார், பிரதீப் ரங்க நாதனை சந்தித்து இந்த கதையை சொன்னபோது அவருக்கு கதை பிடித்திருந்தாலும், ராம் கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவிற்கு தான் ஒர்த் இல்லை என்று கூறிவிட்டாராம். இந்நிலையில் பிரேம்குமார், 96 பாகம் 2 படத்தை ஓரம் கட்டி வைத்துவிட்டு தனது அடுத்த படத்திற்கான ஒரு வரி கதையை நடிகர் விக்ரமிடம் சொன்னாராம். 96 பார்ட் 2வில் ஏற்பட்ட சிக்கல்.... அடுத்த படத்திற்காக அந்த நடிகரை டார்கெட் செய்யும் பிரேம் குமார்!விக்ரம் அதற்கு ஓகே சொல்லிவிட்டு முழு கதையையும் தயார் செய்து வரும்படி கூறியுள்ளாராம். இதன்மூலம் வருங்காலத்தில் பிரேம்குமார் – விக்ரம் காம்போவில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ