Homeசெய்திகள்சினிமா'கருப்பு' படத்தின் முக்கிய அப்டேட்.... ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

‘கருப்பு’ படத்தின் முக்கிய அப்டேட்…. ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

-

- Advertisement -

கருப்பு படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.'கருப்பு' படத்தின் முக்கிய அப்டேட்.... ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

சூர்யாவின் 45வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் கருப்பு. இந்த படத்தை ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கி இருக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சாய் அபியங்கர் இதன் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படத்தில் சூர்யா, த்ரிஷா, நட்டி நட்ராஜ், யோகி பாபு, சுவாசிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். இதில் சூர்யா வக்கீலாக நடித்துள்ளார். கங்குவா, ரெட்ரோ ஆகிய படங்களுக்கு பிறகு உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. 'கருப்பு' படத்தின் முக்கிய அப்டேட்.... ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. அடுத்தது இந்த படம் 2026 ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு இன்று (அக்டோபர் 14) அல்லது நாளை (அக்டோபர் 15) வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.

MUST READ