Homeசெய்திகள்தமிழ்நாடு1 நாளுக்கு முன்னே சொல்லணும்! - நடிகர்கள், விஐபிக்கள் தரிசனத்திற்கு அமைச்சர் ரமேஷ் போட்ட புது...

1 நாளுக்கு முன்னே சொல்லணும்! – நடிகர்கள், விஐபிக்கள் தரிசனத்திற்கு அமைச்சர் ரமேஷ் போட்ட புது ரூல்ஸ்!

-

- Advertisement -

கோயில்களில் நடிகர்கள், நடிகைகள், முக்கியஸ்தர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் போன்ற விஐபிக்கள் வழிபாடு செய்வதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.1 நாளுக்கு முன்னே சொல்லணும்! - நடிகர்கள், விஐபிக்கள் தரிசனத்திற்கு அமைச்சர் ரமேஷ் போட்ட புது ரூல்ஸ்!

புதிய கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகள்
கோயில்களில் சாமானிய பக்தர்களின் தரிசனத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும் பின்வரும் கெடுபிடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

we-r-hiring
  • முன்அறிவிப்பு அவசியம்: விஐபிக்கள் வருகை குறித்து 1 நாளுக்கு முன்பாகவே கோயில் ஆணையருக்கு முறையான விவரங்களை வழங்க வேண்டும்.
  • புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்குத் தடை: கோயில் வளாகத்தில் விஐபிக்கள் மற்றும் பிரபலங்கள் போட்டோ, வீடியோ எடுப்பதற்கு அனுமதி இல்லை.
  • ரீல்ஸ்களுக்குக் கடும் தடை: கோயில்களில் தெய்வ சிலைகள், கருவறைகளைப் போட்டோ, வீடியோ எடுக்கவும் மற்றும் ‘ரீல்ஸ்’ (Reels) பதிவிடுவதற்கும் முற்றிலுமாகத் தடை விதிக்கப்படுகிறது.

செல்போன்களுக்கு முழுமையானத் தடை
முக்கியமான கோயில்களில் வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செல்போன் பயன்பாடு முழுவதுமாகத் தடை செய்யப்படுகிறது. பக்தர்கள் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பாக வைத்துச் செல்வதற்காக, அடுத்த 20 நாட்களுக்குள் அனைத்துக் கோயில்களிலும் மொபைல் பாதுகாப்புப் பெட்டக வசதிகளை (Mobile Lockers) ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரயில்வே காவல்துறையில் 40% காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வாலுக்கு ஜாபர் அலி கடிதம்!

MUST READ