Homeசெய்திகள்விளையாட்டுஆலந்தூரில் தேசிய அளவிலான மாபெரும் சிலம்பப் போட்டி 2026: 1500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு!

ஆலந்தூரில் தேசிய அளவிலான மாபெரும் சிலம்பப் போட்டி 2026: 1500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு!

-

- Advertisement -

சென்னை ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மான்போர்ட் தனியார் பள்ளியில், சிலம்பம் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு சார்பில் தேசிய அளவிலான மாபெரும் சிலம்பப் போட்டி 2026 கோலாகலமாக நடைபெற்றது. ஆசான் எம்.பி. கராத்தே சுதர்சன் அவர்களின் சிறப்பான ஏற்பாட்டில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன.

we-r-hiring

தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பத்தைக் கட்டிக்காக்கும் வகையிலும், மாணவர்களிடையே அதன் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும் நடைபெற்ற இந்தப் போட்டியில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுமார் 1,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பிரிவுகள் மற்றும் போட்டிகள்:

இப்போட்டிகளில் 5 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட பல்வேறு வயதுப் பிரிவுகள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக, ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறுவர், சிறுமியர் தங்களது சிலம்பத் திறமைகளை வியக்கத்தக்க வகையில் சுழற்றி நடுவர்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்தனர்.

போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், சிலம்பம் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அசோசியேசன் ஆப் தமிழ்நாட்டின் நிர்வாகிகள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சிலம்பப் பயிற்சியாளர்கள், ஆசான்கள் மற்றும் ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பாரம்பரியக் கலையான சிலம்பத்தை தேசிய அளவில் ஊக்குவிக்கும் வகையில் அமைந்த இப்போட்டி அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை 2026: சீனாவுக்கு எதிரான முதல் ஆட்டம் 2-2 என டிரா – நவ்நீத், தீபிகா அசத்தல்!

MUST READ