Homeசெய்திகள்கட்டுரைசட்டமன்றத்தில் விஜய் 'டிஸ்கோ டான்ஸ்': 100 நாள் ஆட்சியின் 'பில்ட்-அப்' குறித்து மூத்த பத்திரிகையாளர் ஐயநாதன்...

சட்டமன்றத்தில் விஜய் ‘டிஸ்கோ டான்ஸ்’: 100 நாள் ஆட்சியின் ‘பில்ட்-அப்’ குறித்து மூத்த பத்திரிகையாளர் ஐயநாதன் காட்டமான விமர்சனம்!

-

- Advertisement -

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது ஆட்சியின் செயல்பாடு மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஐயநாதன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் சட்டமன்றத்தில் எழுந்து நின்று கேள்விக்குத் துணிச்சலாகப் பதிலளிப்பார்கள். ஆனால், விஜய் தரப்பு அதற்கு நேர்மாறாகச் செயல்படுகிறது,” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

we-r-hiring

சட்டமன்றத்தில் ‘டேபிள்’ பைல்கள்

சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகக் கூறி, விஜய் அவற்றை மேஜை மீது வைத்திருப்பதாகக் குறிப்பிடுவதை, “சும்மா உருட்டு” என ஐயநாதன் வர்ணித்துள்ளார். “ஆதாரம் இருந்தால் அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? ஏன் அதை மேஜை மீது வைத்து மிரட்டல் விடுகிறீர்கள்?” என்று அவர் வினா எழுப்பியுள்ளார்.

100 நாள் ஆட்சி: சாதனையா? அல்லது பெயர் மாற்றமா?

விஜய்யின் 100 நாள் ஆட்சி குறித்த ‘ஹைப்’ (மிகைப்படுத்தப்பட்ட பிம்பம்) தேவையற்றது என்று கூறும் ஐயநாதன், பல திட்டங்கள் முந்தைய திமுக ஆட்சியின் தொடர்ச்சியாகவோ அல்லது பெயர் மாற்றப்பட்ட திட்டங்களாகவோ மட்டுமே இருப்பதாகவும், விஜய்யால் ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகளைத் தாண்ட முடியாது என்றும் அடித்துக் கூறியுள்ளார். மேலும், முதல்வரைச் சந்திக்க அதிகாரிகள் காத்துக்கிடக்க வேண்டிய சூழலும், அவரது பணி நேரக் கட்டுப்பாடுகளும் நிர்வாகத் திறமையைக் கேள்விக்குள்ளாக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொலைகள், போதைப்பொருள் மற்றும் சட்டம்-ஒழுங்கு

ஆட்சியில் வெளிப்படைத்தன்மை நிலவுவதாக விஜய் கூறிவரும் நிலையில், 150-க்கும் மேற்பட்ட கொலைகள், பெண்கள் மீதான வன்கொடுமைகள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய ஐயநாதன், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, காவிரி நதிநீர் விவகாரம் மற்றும் கர்நாடகாவில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் ஆகியவற்றில் அரசின் மௌனம் அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘பில்ட்-அப்’ அரசியலின் பின்னால் உள்ள உண்மை

விஜய் தரப்பு சமூக வலைதளங்களில் உருவாக்கி வரும் பிரம்மாண்ட பிம்பங்கள் அனைத்தும் திட்டமிட்ட பிரச்சாரங்கள் என்றும், இவை 2029 தேர்தல் நோக்கிய வியூகங்களாக இருக்கலாம் என்றும் ஐயநாதன் சந்தேகம் எழுப்பியுள்ளார். மக்கள் முட்டாள்களாக இருக்கும் வரை யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் ஆகலாம் என்று கடுமையாக விமர்சித்த அவர், ரசிகர் மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நிர்வாகத்தை நடத்துவது ஆபத்தானது என எச்சரித்துள்ளார்.

ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இருப்பதாகக் கூறினாலும், மத்திய அரசுடனான உறவு மற்றும் நிர்வாக ரீதியான பல முடிவுகளில் விஜய் அரசு மௌனம் காப்பதாகக் கூறும் ஐயநாதன், எதிர்வரும் இடைத்தேர்தல்கள் விஜய் அரசின் மீதான உண்மையான தீர்ப்பாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

“உயிர் தப்பி வந்தேன்!”: விசிக மாநாட்டு நெரிசல் குறித்துத் தொல். திருமாவளவன் வேதனை!

MUST READ