Homeசெய்திகள்கட்டுரைடெல்லியில் கெஜ்ரிவாலுக்கு நேர்ந்தது விஜய்க்கும் நிகழலாம் - மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி எச்சரிக்கை!

டெல்லியில் கெஜ்ரிவாலுக்கு நேர்ந்தது விஜய்க்கும் நிகழலாம் – மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி எச்சரிக்கை!

-

- Advertisement -

தமிழகத்தில் தற்போது புதிய அரசியல் மாற்றங்களை நோக்கி நகர்ந்து வரும் நடிகர் விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தவெக-வின் உத்திகள் குறித்து மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான ஆர். மணி அவர்கள் தனது நேர்காணலில் பல முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

we-r-hiring

தனிமனித வழிபாடும், ஆபத்தான நகர்வுகளும்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்படும் சில அரசியல் முன்னெடுப்புகள் மற்றும் சமூக வலைதளப் பிரச்சாரங்கள் குறித்துப் பேசிய அவர், விஜய்யை ஒரு ‘கல்ட் பிகர்’ (Cult Figure) எனப்படும் தேவதூதராகக் கட்டமைக்கும் முயற்சிகள் தீவிரமாக நடப்பதாகத் தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் இருந்ததை விட உச்சபட்சமான முகஸ்துதி கலாச்சாரம் தற்போது உருவெடுத்து வருவது கட்சிக்கும், அரசியலுக்கும் ஆபத்தானது என்று அவர் எச்சரித்தார்.

டெல்லி கெஜ்ரிவாலின் அனுபவமும், தேசிய அரசியலும்

தவெக-வின் அடுத்த கட்ட இலக்கு தேசிய அரசியலை நோக்கியும், பிரதமர் பதவியை மையமாகக் கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

வட இந்தியச் சமூக வலைதளங்களில் திட்டமிட்டுத் பரப்பப்படும் பிரச்சாரங்கள் குறித்துப் பேசிய ஆர். மணி, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளையும் வழக்குகளையும் சுட்டிக்காட்டினார். அதே போன்றதொரு அரசியல் சூழல் எதிர்காலத்தில் விஜய்க்கும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், இதை தேசிய கட்சிகள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டாராம்.

எதிர்கால அரசியல் சவால்கள்

ஆளுங்கட்சியான திமுக-வை எதிர்க்கும் அதேவேளையில், தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எதிர்கால அரசியல் கணக்கீடுகளையும் இந்த நகர்வுகள் எப்படி மாற்றியமைக்கும் என்பது குறித்து அவர் விரிவாக விவரித்துள்ளார்.

தவெக தனது அரசியல் போக்கிலும், சமூக வலைதள உத்திகளிலும் உரிய மாற்றங்களைச் செய்யாவிட்டால், அது கடுமையான அரசியல் தாக்கங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் தனது நேர்காணலில் எச்சரித்துள்ளார்.

MUST READ